ஜோஜூ ஜார்ஜ்யை பாராட்டிய கமலஹாசன்!

ஜோஜு ஜார்ஜ் மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர்.

தமிழில் ஜகமே தந்திரம் படத்தில் அறிமுகமானவர், சூர்யா – 44 மற்றும் கமலுடன் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் 7 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.

தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன் இயக்குநராக, ‘பணி’ என்கிற படத்தை இயக்கி, நடித்து வந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ. 25 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமானது.

படத்தின் தமிழ் டப்பிங் வடிவம் நாளை (நவ. 22) வெளியாகிறது. இதற்காக, ஜோஜு ஜார்ஜ் தன் படக்குழுவினருடன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.