சிம்பு 49 இயக்குவது ஏன்? அஸ்வத் மாரிமுத்து விளக்கம்.

சிம்பு நடிக்கும் அவரது 49 வது படம் குறித்த பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் அது குறித்து படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குனரான அஸ்வத் மாரிமுத்து 2020 ஆம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தின் தெலுங்கு பதிப்பையும் இவரே இயக்கியிருந்தார்.

தற்போது நடிகரும் இயக்குனருமான பிரதிப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் என்ற படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார், விஜே சித்து உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். டிராகன் படத்துடைய ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அஸ்வத் மாரிமுத்து சிம்பு நடிக்கும் அவரது 49 வது படத்தை இயக்குவார் என்ற அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரிய அளவில் ஹிட் கொடுக்காத இயக்குனருடன் சிம்பு இணைகிறார் என்று அவரது ரசிகர்கள் சிலர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தனர். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பார் என்று ஒரு சிலரும், அனிருத் இசையமைப்பாளர் என்று சில ரசிகர்களும் வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில் சிம்பு படம் குறித்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் படத்தின் தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் மற்றும் நடிகரான சிம்பு ஆகியோர் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் படத்தில் இடம்பெறும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

அதேநேரம் ரசிகர்கள் மிகவும் திருப்தி அடையும் வகையில் சிம்பு படம் அமையும் என்றும் அஸ்வத் மாரிமுத்து உறுதி அளித்துள்ளார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

https://x.com/Dir_Ashwath/status/1849472529087484031?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1849472529087484031%7Ctwgr%5Ea2ca38c1168f35953a9508a1260495653b0df9cf%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F

அஸ்வத் மாரிமுத்து தனது டிராகன் படத்தின் ஷூட்டிங் இன்னும் முடிக்கவில்லை. இந்த படம் முடிந்தவுடன் சிம்புவின் 49 வது படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பு தற்போது கமல்ஹாசன் முன்னணி கேரக்டரில் நடிக்கும் தக் லைஃப் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் தேசிங்கு பெரியசாமியுடன் சிம்பு இணையும் அவரது 48 ஆவது படம் குறித்த அப்டேட் எதுவும் வெளியாகாமல் உள்ளது.