கார் ரேஸில் அஜித்துக்கே டப் கொடுக்க போகும் கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் துபாயில் கார் ரேஸ் ஓட்டுவது போன்ற வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அதன் பின்னர் ஹீரோயினாக அறிமுகமான அவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக மாறினார். தற்போது பாலிவுட்டில் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ள அட்லீ தயாரித்துள்ள தெறி படத்தின் இந்தி ரீமேக் படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார்.

சமீப காலமாக அடிக்கடி துபாய்க்கு சுற்றுலா சென்று வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது துபாயில் ரேஸ் கார் ஓட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது அபுதாபியில் ரேஸ் கார் ஓட்டும் பயிற்சியை மேற்கொண்டு ரேஸ் காரை டிராக்கில் மற்ற போட்டியாளர்களுடன் ஓட்டிக் காட்டி அசத்தியுள்ளார். அதன் வீடியோவை கீர்த்தி சுரேஷ் தற்போது வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். துபாயில் நடைபெறவுள்ள கார் பந்தயத்துக்கான விளம்பரம் போல இது உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.