த்ரிஷா இல்லனா ஆண்ட்ரியா

பாடகி சுசித்ராவின் அடுத்த டார்கெட்

பிரபல பின்னணி பாடகியாக திகழ்ந்த சுசித்ரா ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார். அவர் நடிகர் கார்த்த்க் குமாரை முதலில் திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை பாதியிலேயே முடிந்தது. அதற்கு காரணங்களாக பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன. முக்கியமாக கார்த்திக் குமாரின் டார்ச்சர்தான் தான் வெளியேறியதற்கு காரணம் என்று சுசித்ரா பல பேட்டிகளில் சொன்னார். குறிப்பாக சுச்சி லீக்ஸ் விவகாரம் அவர்களது பிரிவுக்கு முக்கிய பங்கு வகிப்பதாக கருதப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்பு கோலிவுட்டையே பரபரப்பாக்கிய சம்பவம் என்றால் சுச்சி லீக்ஸ். அதில் திரையுலக பிரபலங்களில் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகின. அந்த சமயத்தில் சுசித்ரா மனநலம் பாதிக்கப்பட்டதாக கார்த்திக் குமார் தெரிவித்திருந்தார். நிலைமை இப்படி இருக்க சமீபகாலமாக சுசித்ரா மீண்டும் பேட்டிகளை சரளமாக கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.

அவர் அளித்துவரும் பேட்டிகளில் சுச்சி லீக்ஸுக்கு காரணமே தனுஷ், திரிஷா, கார்த்திக் குமார் உள்ளிட்டோர்தான். தன்னை பலிகடா ஆக்கிவிட்டார்கள் என்று குறிப்பிடும் அவர்; பல பிரபலங்களை பற்றியும் சரளமாக பேசிவருகிறார். கமல், விஜய், திரிஷா, தனுஷ், ரீமா கல்லிங்கல் என யாரையும் விட்டு வைப்பதில்லை. நேற்றுக்கூட சுசித்ரா மீது ரீமா கல்லிங்கல் ஒரு புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சுசித்ராவின் பார்வை இப்போது ஆண்ட்ரியாவின் பக்கம் திரும்பியிருக்கிறது. தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “மேடையில் பாடும் கலாசாரத்தையே ஆண்ட்ரியா கெடுத்துவிட்டார். அவர் பாடும்போது கேமரா முன் வந்து ஆடுவது போன்ற வேலையெல்லாம் செய்கிறார். அதெல்லாம் ரொம்ப மோசம். அவர்களை போன்றோர் மேடையில் பாடுவதால்தான் என்னைப் போன்ற கூச்சம் உடையவர்களுக்கு வேடையில் பாடல் பாடுவதற்கு வாய்ப்புகள் இல்லாமல் போகின்றன.

அவரை போல் எல்லாம் மேடையில் நம்மால் பாட முடியாது. அவர் பாடுவது மட்டுமில்லாமல் மேடையில் பல வேலைகளை செய்கிறார். அவர் பாடுவதை கேட்பதற்காகவா கூட்டம் செல்கிறது. அவரை பார்க்கத்தான் செல்கிறது. மேடையில் பாட வேண்டுமென்றாலே அப்படி இருக்க வேண்டும் என்று உருவாக்கிவிட்டார்கள். அப்படி உருவாக்கி வைத்திருக்கும்போது நாங்கள் எல்லாம் எப்படி பாட முடியும். இப்போது மக்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.

மேடையில் பாடும் பாடகிகளின் ஆடைகளும் ரொம்பவே மோசமாக இருக்கின்றன. முக்கியமாக ஆண்ட்ரியா பாடும்போது எல்லோரும் என்னை பாருங்கள் என்று சொல்வது போலவே பாடுகிறார். அந்த பளபளப்பு, போலித்தன்மையைத்தான் மக்களும் விரும்புகிறார். அந்த ட்ரெண்டுதான் இப்போது இருக்கிறது” என்றார்.