வி ஜே மணிமேகலையின் பதிவுக்கு, மா பா கா கொடுத்த செருப்பு ட்வீட் பதிலடி.

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ஆங்கர் ஆக பணியை செய்து வந்த VJ மணிமேகலைக்கும் அந்த நிகழ்ச்சியின் கோமாளியாக இருந்து வந்த பிரியங்காவுக்கும் இடையே கடுமையான சண்டை மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரியங்கா மணிமேகலையின் வேலையில் குறுக்கிட்டு அவரை தொகுப்பாளினி பணியை செய்ய விடாமல் தடுத்து வந்ததாக கூறி மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேறினார்.

இந்த விஷயம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டதை அடுத்து ஆரம்பத்தில் மணிமேகலைக்கு சப்போர்ட் செய்த பலரும் பின்னர் பிரியங்கா பக்கம் சாய்ந்து அவருக்கு சப்போர்ட் செய்ய ஆரம்பித்தனர். அந்த வகையில் பிரபல சீரியல் நடிகையான பரீனா, குரேஷி, சுனிதா, பூஜா,டி ஜே பிளாக் ,ஷாலின் ஜோயா, அன்ஷிதா, பாவினி ,அமீர் , நிரூப் இப்படி எல்லாருமே பிரியங்காவுக்கு ஆதரவாக சப்போர்ட் செய்து பேசினார்கள்.

அந்த வகையில் மணிமேகலைக்கு ஆரம்பத்தில் ஆதரவாக பேசும் வகையில் கமெண்ட் செய்திருந்த பரீனா பின்னர் திடீரென பிரியங்காவுக்கு சப்போர்ட் செய்யும் விதமாக இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போட்டு திடீரென கட்சி மாறிவிட்டார். இப்படி தனக்கு சப்போர்ட் செய்தவர்கள் திடீரென பிரியங்காவுக்கு சப்போர்ட் செய்ததை பார்த்து கடும் கோபத்திற்கு உள்ளான மணிமேகலை தனது கணவருடன் சேர்ந்து ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.

அதில்….நான் எப்போ கிண்டல் பண்ணதுனால ஷோ விட்டு வெளியே போனேன்? என்னை மன்னிப்பு கேட்க சொன்னதால் தான் நான் அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினேன். எல்லாரும் முதுகுல குத்திட்டீங்க, காசு தான் எப்போதுமே அல்டிமேட் போல… சொம்புக்கெல்லாம் என்ன மரியாதை என்று சொம்பு தூக்கி அடிப்பது போல் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இதை அடுத்து பிரியங்காவுக்கு சப்போர்ட் செய்து பேசுபவர்களை சொம்பு என்று மறைமுகமாக தாக்கி பேசியிருந்தார் மணிமேகலை. இதை பார்த்து கோபத்திற்கு உள்ளான குரேஷி கொஞ்சம் மெயின்டைன் பண்ணுங்க பார்த்து பேசுங்க என்பது போல தனது ஸ்டோரீஸ் இல் பதிவிட்டு இருந்தார். அதேபோல் மாகாபா பிரியங்காவுக்கும் மிகச் சிறந்த நண்பர் என்பது தெரியும். இந்த பிரச்சனையை ஆரம்பிக்கும் போது கூட மாகாபா ஆனந்த் மீடியாக்களிடம் பேசும்போது….

எனக்கும் அந்த நிகழ்ச்சிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. அதனால அத பத்தி பேச ஒன்னுமே இல்ல. ஒருவேளை நான் அங்க இருந்தா அவங்க சரி இவங்க தப்புன்னு யார் மேல தப்பு இருக்கு என்பதை சொல்லி இருப்பேன். அவங்க ரெண்டு பேரும் அடிச்சிகிட்டோம். ரெண்டு யானை அடிச்சுகிட்டு இருக்கும்போது சமாதானப்படுத்த குறுக்க யாராச்சும் போனா நம்மள நசுக்கிடும். எனவே தூரமிருந்து வேடிக்கை மட்டுமே பார்ப்போம் என மா கா பா கூறினார் .

அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் பைரலானது. ரெண்டு பேருக்குமே சப்போர்ட் செய்யாமல் மாகாபா பேசியிருந்தது வைரலானது. இந்நிலையில் தற்போது மாகாபா வெளியிட்டு இருக்கும் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் மிகப்பெரிய அளவில் வைரல் ஆக்கி வருகிறது. அதாவது அவர் தன்னுடைய செருப்பை எடுத்து டாய்லெட்டின் மீது வைத்து போட்டோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.

அந்த போஸ்ட்டில் சனிக்கிழமை எல்லாம் ஃப்ரீயா இருப்பாங்க வீடியோ போடுவோம் வாங்க…. செருப்பு போட்டோ தான் இருக்கு என கூறி இருக்கிறார். இதன் மூலம் மணிமேகலை கடந்த இரண்டு மாதங்களாக சனிக்கிழமை தன்னுடைய சேனலில் வீடியோ வெளியிட்டு இருப்பதை மாகாபா மறைமுகமாக தாக்கி பேசி இருக்கிறார்.