அனிருத் இசையில் அடுத்து வெளியாகவுள்ள படம் வேட்டையன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. நாளை மறுநாள் அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இந்நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள, “ஹண்ட்டர் வந்துட்டார்” என்ற பாடல் உருவாக்கத்தின் போது எடுத்த வீடியோவை அனிருத் பகிர்ந்துள்ளார்.
https://x.com/anirudhofficial/status/1836389904265130055?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1836389904265130055%7Ctwgr%5E287c7682ce2acf2321e798bf6a73827e3c3bc7c3%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F
படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. அதற்கான பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்தியன் 2 படத்தின் மூலம் பெருத்த அடியை எதிர்கொண்டுள்ள, லைகா நிறுவனத்திற்கு வேட்டையன் படம் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியன் 2 படம், எடுக்கும்போதே இந்தியன் 3 படத்தினையும் படக்குழு எடுத்துவிட்டதால், இந்தியன் 2 படம் கொடுத்த ஏமாற்றத்தில் இருந்து மீளவும் இந்தியன் 3 படத்தை ரிலீஸ் செய்யவும் வேட்டையன் படத்தை நம்பிக்கொண்டு உள்ளது. அதேபோல் அஜித் நடிப்பில் உருவாகிவரும் விடாமுயற்சி படமும் நம்பிக்கை லிஸ்ட்டில் உள்ளது.
இப்படியான நிலையில் படத்தின் டைட்டில் சாங், “ஹண்ட்டர் வந்துட்டார்” பாடலை அனிருத் உருவாக்கும் வீடியோவ அவரே வெளியிட்டுள்ளார். அந்தப் பாடலில், கெட்டப்பயன் சார் போன்ற சூப்பர் ஸ்டார் பல படங்களில் பேசிய டையலக் எல்லாம் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்தப் பாடலை தெருக்குறள் அறிவு எழுதியுள்ளார். சித்தார்த் பேஸ்ரர் பாடியுள்ளார். அனிருத் வெளியிட்டுள்ள வீடியோவை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த பாடல் ஜெய்லர் படத்தில் இடம் பெற்ற ஹுக்கும் பாடலைவிடவும் சூப்பர் ஹிட் ஆகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டு உள்ளனர்.