சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் தசெ ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் படத்தை லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் பாலிவுட் சீனியர் நடிகர் அமிதாப் பச்சன் கேமியோ ரோலில் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.
வேட்டையன் படத்தில் மஞ்சு வாரியார் ரஜினிக்கு மனைவியாக தாரா என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும் ராணா ரகுபதி, பகத் பாசில், ரக்சன், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். வேட்டையன் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஆக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சில தினங்களுக்கு முன் வேட்டையன் படத்திலிருந்து பர்ஸ்ட் சிங்கிள் மனசிலாயோ பாடல் வெளியாகி ட்ரெண்டிங் ஆனது. இந்த பாடலை மறைந்த பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் குரலில் ஏஐதொழில்நுட்பத்தில் பாட வைத்திருந்தனர். வருகிற அக்டோபர் 10ம் தேதி வேட்டையன் படம் ரிலீஸ் ஆகிறது. வேட்டையன் படம் வருகைக்காக சூர்யா நடித்த கங்குவா படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா, வருகிற 20-ம் தேதி வெள்ளிக்கிழமை நடக்க உள்ளதாக லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேச உள்ளார். வருகிற 20ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் மாலை 6 மணிக்கு வேட்டையன் படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடா இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். அஜித்குமார் தான் விஜய்க்கு போட்டி என்று தமிழ் சினிமாவில் பேசப்பட்ட நிலை மாறி, சமீபகாலமாக ரஜினியை விட பல மடங்கு வசூலில் முன்னிலையில் இருந்து வரும் நடிகர் விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்று ஒரு கருத்து பரவி அது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் தொடர்ச்சியாக ரஜினி காக்கா கழுகு கதையெல்லாம் சொல்லி மேலும் பிரச்சனையை பெரிது படுத்தினார். ஆனால் விஜய் ஒரு கட்டத்தில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும்தான். நான் எப்போதும் உங்கள் தளபதி தான் என்று அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். எனினும் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் விஜய் வந்திருப்பதும் ரஜினி மீதான விமர்சனத்தை அதிகரிக்க செய்துள்ளது. இந்த விழாவில் ரஜினி விஜய் குறித்து குட்டி கதை எதுவும் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.