தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ராணா, ஃபகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வேட்டையன்’.

Pan India படமாக உருவான இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், படத்தின் முதல் சிங்கிளான ‘மனசிலாயோ’ பாடல் இன்று (செப்டம்பர் 9) மாலை வெளியிடப்பட்டுள்ளது. இது ரஜினி ரசிகர்களை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.