விஜய் ரசிகர்களின் நீண்ட நாளைய காத்திருப்புக்கு பதில் கிடைத்த நாள் என்றே கூறலாம்.
வெங்கட் பிரபு படம் என்றாலே அதில் ஒரு காமெடி ஒரு பேமிலி என்டர்டெயின்மென்ட், ஒரு எமோஷனல் என்றுதான் இருக்கும்.
இதிலும் அதே வேலைதான், ஆனாலும் இது விஜய் படம்.
ஏனென்றால் விஜய் ரசிகர்களுக்கு எது எது எல்லாம் விஜய் நடித்தால் பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்து செதுக்கிருக்கிறார் வெங்கட் பிரபு.
படத்தின் கதை, தமிழ் சினிமாவில் அடித்து துவைத்த அதே பழைய கதை தான். படத்தின் திரைக்கதையோ அதைவிட இன்னும் அடித்து துவைத்த திரைக்கதை. ஆனால் அதை எங்கேயுமே போர் அடிக்காமல் எடுத்துச் சென்று இருப்பது தான் இந்த படத்தின் சிறப்பு.
‘மைக்’ மோகன், ஜெயராம், பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, அஜ்மல், திரிஷா சிவகார்த்திகேயன் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருக்கிறது.
ஆனாலும் படம் விஜய் vs விஜய் என்றே தான் சுற்றுகிறது.
இந்தப் படத்தின் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா, முதல் பாதி படத்தில் அவருடைய அப்பாவான இளையராஜாவின் இசையையும், இரண்டாம் பாதி படத்தில் அவருடைய இசையையும் பயன்படுத்தி இருக்கிறார். படம் வெளிவருவதற்கு முன்னர் பாடல்கள் சரியில்லை என்ற சர்ச்சை கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்.
படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே கேப்டன் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரனன் படத்தின் இசையோடு ஆரம்பித்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம். மேலும் விஜயகாந்த் விஜய் இவர்கள் இருவருக்கும் ஆக முதல் காட்சியை சித்தரித்து இருப்பது மிகவும் அற்புதமாக உள்ளது. என்ன படத்தில் அந்த ஏஐ காட்சியை இன்னும் மெருகேற்றி இருக்கலாம்.
படத்தில் குறை உள்ளது என்றால், இரண்டாம் பாதியில் ஒரே வட்டத்திலேயே சுற்றுவதுதான், மேலும் ஒரு இன்டலிஜென்ட் ஆபிசர், எப்படி தனது பையனை யாருமில்லாத ஒரு சோபாவில் அமர வைத்து விட்டு செல்வார்.. இது மாதிரி ஆங்காங்கே சில லாஜிக் மிஸ்டேக்ஸ் இருந்தாலும், படம் அடுத்தடுத்த காட்சியை நோக்கி நகர்வதால், ஆடியன்சை இதை யோசிக்க விடாமல் செய்வதால் படம் வெற்றி அடைந்து விடுகிறது.
விஜய் அரசியலுக்கு வருவதால், சில பல பிரச்சனைகள் காரணமாக முதல் நாள் வசூல் பெரிதாக இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இரண்டாம் நாள் அடுத்தடுத்து வரும் நாட்களில் இந்த வசூல் மேலும் கூடும் என்று நம்பப்படுகிறது.
விஜய் நடித்த கோட் படத்தின் ஆட்டின் தலை துண்டிக்கப்படுகிறதா..? முட்டு கெடாவாக மாறுகிறதா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆக மொத்தத்தில் கோட் படம் எப்படி இருக்கிறது என்றால், மூளையை கழட்டி ஒரு மூலையில் வைத்துவிட்டு, இது முழுக்க முழுக்க விஜய் படம் மட்டுமே இன்று பார்க்கும் பட்சத்தில் குடும்பத்தினர் அனைவருக்கும் பிடித்த படமாகவே இருக்கும் என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை.