பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் சாப்பிடுவதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படம் ஒன்றுக்கு ரூ. 250 கோடி சம்பளம் வாங்கும் அவர், படப்பிடிப்பு சமயத்தில் பிற்பகல் 2 மணிக்கு வீட்டுக்கு வந்து உடற்பயிற்சி செய்துவிட்டு அதிகாலை 5 மணிக்கு தூங்குவதாகவும், காலை 9 அல்லது 10 மணிக்கு எழுந்து ஒரு வேளை மட்டும் சாப்பிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது அவரது விருப்பமே என்றாலும், ரசிகர்கள் அவரது உடல்நலம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். அதிகாலை உடற்பயிற்சி, குறைந்த தூக்கம், ஒரு வேளை உணவு ஆகியவை உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.
இதையொட்டி, ரொமான்டிக் ஹீரோ என்றாலே ஷாருக்கானைத்தான் சொல்வார்கள். ஆனால், அவர் தன்னை ஆக்ஷன் ஹீரோவாக பார்த்து வந்ததாக கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுகளை மிகவும் விரும்பும் ஷாருக்கானுக்கு 300 விருதுகள் இருப்பதாகவும், அவற்றை வைக்க தனது அலுவலகத்தில் தனி அறை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்