இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன்,பசுபதி ஆகியோரது மிரட்டலான நடிப்பில் வெளியாகி இருக்கும் படம்.
கதைப்படி தங்கத்தை தேடி வரும் ஆங்கிலேயனுக்கு தங்கம் கிடைப்பதில் சிரமம் ஆகிறது. இன்னொரு பக்கம் தன் சொந்த நிலத்திலேயே கூலி ஆளாக வேலை செய்வதனால் படும் இன்னல்களை விக்ரம் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மற்றும் அவருடைய இன குழுக்கள் அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விக்ரம் காதில் பேசும் அசரீரி தங்கம் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டுகிறது. இதன் அடிப்படையில் அந்த வெள்ளைக்காரனுக்கு விக்ரம் மூலமாக குண்டுமணி அளவு தங்கம் கிடைக்கிறது.
இதன் மூலமாக நாம் இந்த உலகத்திற்கு யார் என்று நிரூபிப்போம் என்று விக்ரமிடம் மூளைச்சலவை செய்து அந்த வெள்ளைக்காரன் அவருடைய இன மக்கள் குழுமக்கள் அனைவரையும் அந்த நிலச்சுவான்தாரிடம் இருந்து மீட்டு இங்கு பணியாளர்களாக அமர்த்துகிறார். இறுதியில் அவர்களுக்கு தங்கம் கிடைத்ததா..? அவர்கள் எப்படி கொத்தடிமைப்படுத்தப்பட்டார்கள்..? அவர்களின் பூர்வீகம் என்ன..? என்பதைப் பற்றி பேசும் கதை தான் இந்த தங்கலான்.
படத்தின் ஒளிப்பதிவாளர் கிஷோர் குமாருக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள், எந்த ஒரு காட்சியும் ரசனை குறையாமல் எடுத்து இருக்கிறார்.
படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாருக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள். படத்தின் பாடல்களும் அருமை படத்தின் பாடல்களை நடனமாட வைத்த சாண்டிக்கும் இது பெருமை.
இயக்குனர் பா ரஞ்சித்தின் படங்களில் இது மிகப்பெரிய பட்ஜெட் கொண்ட ஒரு படம். ஆனால் எந்த ஒரு சமரசமும் இல்லாமல் இந்த படத்தை எடுத்திருக்கிறார்.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் கதா நாயகனான சியான் விக்ரமுக்கு நடிப்பு ராட்சசன் என்ற பெயர் கொடுக்கலாம்.
அதுமட்டுமில்லாமல் மற்ற கதாபாத்திரங்களான பார்வதி, பசுபதி போன்றோர் தங்களுடைய மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள்.
இயக்குனர் பா ரஞ்சித்துக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள். ஒரு இயக்குனருக்கு தகுதியான தேவையான ஃபிலிம் சென்ஸ் இந்த படம் முழுவதும் தெளிக்கிறது. அந்த அளவிற்கு இந்த படம் ஒரு தரமான படமாக இருக்கிறது.
இந்தப் படத்தின் மிகப்பெரிய குறையாக பார்க்கப்படுவது, படத்தின் முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாவது பாதியில் ஒரே இடத்தில் தேய்ந்து எங்கெங்கோ சுற்றுகிறது. அது மிகப்பெரிய சலிப்பைத் தெரிகிறது.
அதைவிட மிகவும் கொடுமையாக, பா ரஞ்சித் சாதியத்தை பற்றி பேசுகிறேன் என்ற பெயரில் மற்ற சாதியினரின், வர்க்க பேதங்களை பற்றி விமர்சித்துள்ளார். இது முறையற்ற செயல். அவருடைய ஜாதியின மக்களுக்கு பிரச்சனை என்றால் அதைப் பற்றி மட்டும் பேசினாலே போதும். அதை விடுத்து மற்ற சாதியினரின் திணிப்புகளை பற்றி பேசுவது, எவ்வளவு பெரிய அநாகரீகமோ அதைவிட மிகப்பெரிய அநாகரீகம் படம் பார்க்க வரும் ரசிகர்களிடம் அவருடைய சாதியினரை பற்றிய திணிப்பை கொடுப்பது. இதை மாற்றினால் தான் தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கும்.
இவரின் கற்பனைக்கு எல்லையே இல்லை என்ற நோக்கில், புத்தர் கோலார் தங்க வயலில் பிரசங்கம் ஆற்றினர் என்று கூறுவது ஏற்புடையதாக இருக்குமா..? விட்டால் புத்தர் கோலார் தங்க வயலில் தான் ஞானம் அடைந்தார் என்று கூறுவார் போல..?
ஆக மொத்தத்தில் தங்கலான் படத்தில் கருத்தியல் ரீதியாக சில பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், படத்தின் கதையாக இந்த படத்தை ஒரு தடவை கட்டாயம் பார்க்கலாம்.