நடிகர் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது..!

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த ஷாருக்கான், தீவானா என்றத் திரைப்படத்தின் மூலம் இந்தித் திரையுலத்திற்கு அறிமுகமானார். பின்னாளில் இவரை கவுரவப் படுத்தும் விதமாக ஹைதராபாத் உருது பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டத்தினை வழங்கிச் சிறப்பித்தது.

தேவதாஸ், ஜவான், பதான் போன்ற படங்கள் ஷாருக்கானுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

இந்நிலையில் வருடந்தோறும் லோகார்னோ திரைப்பட விழாவானது லோகார்னோ என்ற பகுதியில் நடைபெறும். ஐரோப்பியாவில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டில் லோகார்னோ என்ற பகுதியில் 77 ஆவது திரைப்பட விழா நடைபெற்றது.

இந்த விழாவின்போது நடிகர் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இதனையடுத்து திரையில் சில காட்சிகள் வெளியிடப்பட்டன. அக்காட்சிகள் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களுடைய காட்சிகள் ஆகும்.

பின் மேடையில் பேசிய ஷாருக்கான் : இறைவன் எல்லோரையும் ஆசீர்வதிப்பார் என்றும், இந்த இடத்தில் இருப்பது மிகுந்த சந்தோசத்தைத் தந்துள்ளதாகவும் கூறினார்.