அந்தகன் திரை விமர்சனம்

பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த் யோகி பாபு, ஊர்வசி,கே எஸ் ரவிக்குமார், நவரச நாயகன் கார்த்திக் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

பார்வை தெரியாத பிரசாந்த், லண்டன் இசை கச்சேரியில் கலந்து கொள்ள ஆசைப்படுகிறார். அதனால் அவருக்கு ஒரு பாரில் பியானம் வாசிப்பவராக வேலை கிடைக்கிறது.

அந்த பாரு க்கு ரெகுலராக வரும் நவரச நாயகன் கார்த்திக் இவரின் இசையை கேட்டு, இவரின் வீட்டிற்கு ஒரு முக்கியமான நிகழ்ச்சிக்காக பிரைவேட் பார்ட்டிக்கு அழைக்கிறார். அங்கு செல்லும்போதுதான், பிரசாந்த்க்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து அவர் எப்படி மீண்டார்..? லண்டன் இசைக் கச்சேரிக்கு சென்றாரா..? இல்லையா..? என்பதுதான் படத்தின் கதைக் கரு.

ஹிந்தியில் வெளியாகி சக்கைபோடு போட்ட அந்தாதுன் படத்தை ரீமேக் செய்திருக்கிறார்கள் என்பது ஊரு உலகமே அறியும்.

அதனால் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் இந்த படத்திற்கு செல்லும் பொழுது, தமிழில் உருவாக்கப்பட்ட இந்த வடிவம், உங்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை கொடுத்தே தீரும்.

இந்தப் படத்தை இவரது அப்பா தியாகராஜனே இயக்கியிருக்கிறார் என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம். ஏனெனில் படத்தின் திரைக்கதையில் தேவையில்லாத காட்சிகள் ஒன்று இரண்டு கூட இல்லவே இல்லை.

படத்தில் ஒளிப்பதிவும் மிக நேர்த்தியாக உள்ளது. ஒளிப்பதிவாளர் தன்னுடைய வேலையை செவ்வனே செய்திருக்கிறார்.

படத்தில் நடித்த நடிகர்களான பிரசாந்த் சிம்ரன் கே எஸ் ரவிக்குமார் நவரச நாயகன் கார்த்திக் ஆகிய அனைவரும் அவர்களுடைய எதார்த்தமான நடிப்பால் பிச்சு உதறி இருக்கிறார்கள். அதிலும் நடிகை ஊர்வசி ஒரு படி மேலே போய், வழக்கமான நையாண்டித்தனம் மட்டுமில்லாமல் நடிப்பிலும் தனது முத்திரையை பதித்திருக்கிறார்.

பொதுவாகவே ரீமேக் படம் என்றால் அந்த படத்தின் சாயல் எங்கோ ஏதோ ஒரு இடத்தில் தெரியவே செய்யும், ஆனால் இந்தப் படத்தில் அது துளிகூட தெரியாமல் பார்த்து பார்த்து படத்தை எடுத்திருக்கிறார்கள்.

படத்தின் குறையாக பார்ப்பது சந்தோஷ் நாராயணனின் இசை. அதில் அவர் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். அடுத்த குறை படம் முடிந்த பின் வரும் பாடல் காட்சி. அது படத்திற்கே தேவை இல்லை என்பதால் தான் இறுதியில் வைத்தார்கள். ஆனால் ஒரு நல்ல உணர்வுடன் படத்தை விட்டு வெளியே செல்லும்போது இந்தப் பாடல் அந்த உணர்வைக் கெடுத்து விடுகிறது என்பதை படக் குழுவினர் கொஞ்சம் உணர்ந்திருக்கலாம்.

ஆக மொத்தத்தில் அந்தகன் படம், குடும்பத்துடன் காண வேண்டிய ஒரு ஜனரஞ்சகமான படம்.

நிச்சயம் நடிகர் பிரசாந்திற்கு ஒரு come back கொடுக்கும் என்றும் நம்பலாம்.