கணவர் முன் டவலுடன் போஸ் கொடுக்கும் அமலாபால்: வைரலாகும் ஃபோட்டோ

தமிழ் சினிமாவில் 2011-ம் ஆண்டு வெளியான மைனா படத்தின் மூலம் ஹீரோயினாக பிரபலமானவர் அமலா பால். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.

ஆர்யாவுடன் வேட்டை, விஜய்யுடன் தலைவா, தனுஷுவுடன் விஐபி என பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் ஏஎல் விஜய்யை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்த அமலா பால் சமீபத்தில் தனது நண்பரை இரண்டாவது திருமணம் செய்தார். சில தினங்களுக்கு முன்பு அமலா பாலுக்கு குழந்தை பிறந்த நிலையில் தற்போது மீண்டும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

அதேசமயம் அவ்வப்போது ஏதோ ஒரு சர்ச்சையில் சிக்குவதையும் அமலாபால் வழக்கமாக கொண்டுள்ளார். முன்னதாக ஒரு கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக சென்ற அமலா பால் அப்போது அரைகுறை கவர்ச்சி ஆடையுடன் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது தனது கணவருடன் வெறும் டவலை மட்டும் கட்டிக் கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அமலாபால் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளார். இந்த புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.