இந்தியாவிலேயே முதல்முறையாக ஷாருக்கானின் உருவம் பொறித்த தங்க நாணயம்..!

ஹிந்தி சினிமாவில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான ஷாருக்கான் பாலிவுட்டின் பாஷா என்று அழைக்கப்படுகிறார்.

1980-ல் பிற்பகுதியில் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்த இவர் திரையுலகில் தனது வாழ்க்கையை தொடங்கினார். இந்நிலையில் 1992 ஆம் ஆண்டு இசை காதல் தீவானாவின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் பதான், ஜவான் ஆயிரம் கோடி வசூலை எட்டியுள்ளது.

இந்நிலையில் ஷாருக்கான் வசூல் சக்கரவர்த்தியாக இருந்து வருகிறார். இதைத்தொடர்ந்து க்ரெவின் மியூசியம் இவருக்கு பெருமை சேர்க்கும் வகையாக ஷாருக்கானின் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பெருமையை பெறும் முதல் இந்திய நடிகர் ஷாருக்கான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஷாருக்கானுக்கு அடுத்த மாதம் லொகார்னோ திரைப்பட விழாவில் பெருமை மிகு வாழ்நாள் சாதனையாளர் என்ற விருது வழங்கப்பட உள்ளது.