‘தங்கலான்’ திரைப்படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 1900 களில் கோலார் கோல்ட் ஃபீல்ட்டில் {கே.ஜி.எஃப்} தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமூதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதைப் பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.
இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் மேற்கொண்டுள்ளார். பா.ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறை. இந்த திரைப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது. வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
An era of tyranny, valour and conquests ⚔️#Thangalaan Trailer all set to release on July 10th ❤️🔥✨#ThangalaanTrailer @Thangalaan @chiyaan @beemji @GnanavelrajaKe #StudioGreen @OfficialNeelam @parvatweets @MalavikaM_ @gvprakash @NehaGnanavel @dhananjayang @NetflixIndia… pic.twitter.com/KWQ5zBqxGG
— Studio Green (@StudioGreen2) July 8, 2024
இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அந்த ட்ரெய்லரில் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.