வடிவேலுவின் கோரமுகம்: நடிகர் சாப்ளின் பாலு.

நடிகர் சாப்லின் பாலு தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் வடிவேலு பற்றி பேசி இருந்தார்.

இது குறித்து அவர் பேசும் போது, “நான்தான் சினிமா என்று யாரும் நினைக்கவே கூடாது. அது, அவர்களை தவறான இடத்திற்கு அழைத்துச் சென்று விடும். ‘பூந்தோட்டம்’ திரைப்படத்தில் உங்களுக்கு எல்லாம் தெரிந்த அந்த காமெடி நடிகர், என்னுடைய கேரக்டரை பிடுங்கி நடித்தார். ஆம், பூந்தோட்டம் திரைப்படத்தில் எனக்கு 10 நாட்கள் ஷூட்டிங் என்று கூறியிருந்தார்கள். இதையடுத்து நான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றிருந்தேன்.

வடிவேலுவின் கோரமுகம்

எனக்கு எதிர்புறமாக அந்த நடிகர் உட்கார்ந்து இருந்தார். அவரை பார்த்த போது, அவர் கொஞ்சம் கோபமாக இருக்கிறார் என்பது தெரிந்தது. அதை பார்த்த உடனேயே, நான் அவரிடம் சென்று, ஏன் கோபமாக இருக்கிறீர்கள் என்று கேட்டேன். முதலில் அவர் பிடி கொடுக்கவில்லை. அடுத்ததாக ஒரு பேப்பரை எடுத்து, அந்தப்படத்தில் இடம் பெற்ற முக்கியமான நடிகர்களின் பெயர்களை எழுத சொல்லி, அந்தப்பட்டியலில் தான் இல்லை என்பதை கூறினார்.

அதாவது, நான் கமிட் ஆகி இருந்த கேரக்டரை அவர்தான் செய்ய வேண்டும் என்று மறைமுகமாக சொன்னார். இதைக்கேட்ட எனக்கு அழுகையாக வந்துவிட்டது. அடுத்த நாள் பார்த்தால், அந்த கேரக்டர் அவருக்கு சென்று விட்டது. இந்த நிலையில், அந்தப்டப்பிங் ஸ்டியோவிற்கு என்னை அழைத்து இருந்தார்.

அங்கு சென்று பார்த்த பொழுது, அந்த கேரக்டரை காண்பித்து செல்லம்… இந்த கேரக்டரை நீ செய்வதாக இருந்தாயாமே, இது எனக்கு தெரிந்திருந்தால், நான் அந்த கேரக்டரை செய்திருக்கவே மாட்டேனே என்று சொன்னார். அதற்காக நான் அவர் மீது கோபப்படவோ, பொறாமைப்படவோ இல்லை. ஆனால், அதை அவர் எப்போது கூறி இருக்க வேண்டும். அவர் அந்த கேரக்டரை நன்றாக செய்யவில்லை. உள்ளார்ந்து நடிக்க வில்லை.” என்று பேசினார்.