நான் வளந்ததுக்கு காரணம் இந்த நடிகர் தான் – நடிகர் வடிவேலு.

தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கென தனி உடல் மொழியை உருவாக்கியவர் வடிவேலு. தனது நகைச்சுவை பாணியால் தமிழ் சினிமாவையே கட்டிப்போட்டார் என்றால் நிச்சயம் மறுக்க முடியாது.

படத்தில் ஹீரோவுக்கு நிகராக வடிவேலுவின் கதாபாத்திரத்திற்கு அதிக வெய்டடேஜ் இருக்கும். ஹீரோவுக்காக படங்கள் ஓடியது தாண்டி படத்தில் வடிவேலு நடிக்கிறார் என்பதற்காகவே கூட்டம் கூட்டமாய் மக்கள் திரையரங்குகளில் குவிந்த கலாமும் உண்டு.

நடிப்பில் பின்னி பெடலெடுத்த வடிவேலு தனது குரல் திறனாலும் மக்களை ஈர்த்தார். எட்டணா இருந்தா எட்டுறு போன்ற பாடல்கள் இன்றும் பிரபலம். வடிவேலுவின் டைமிங் காமெடிகள், மற்றும் பல காமெடி வசனங்கள் இன்றைய 2கே கிட்ஸ் மத்தியிலும் பிரபலமாக உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் வடிவேலு தமிழ் சினிமாவில் இருந்து விலக்கப்பட்ட நிலையில், அவரின் நகைச்சுவை மட்டும் ஓயாமல் மக்களை மகிழ்வித்து வந்தது. மீம் கிரியேட்டர்களின் ஆஸ்தான குருவாக இன்றும் வடிவேலு இருந்து வருகிறார்.

நாய் சேகர் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் நகைச்சுவை மன்னன் வடிவேலு, அந்த படம் அவருக்கு கைகொடுக்கவில்லை. அதன் பின் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் இதுவரை ஏற்று நடித்திராத சீரியஸ் காதிபத்திரத்தில் நடித்த வடிவேலுவுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. படமும் ஹிட் அடித்தது.

 

சமீபத்தில் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியின் நடுவர் வெங்கடேஷ் பட் வடிவேலுவிடம் சிறப்பு நேர்காணல் ஒன்றை எடுத்தார். அதில் நடிகர் வடிவேலு கண்கலங்கி ராஜ் கிரண் குறித்து பகிர்ந்த விஷயம் ரசிகர்கள் பலரின் கவனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகர் வடிவேலு தனது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை தனக்கு கொடுத்த நடிகர் ஒருவரை கடவுள் என்று குறிப்பிட்டு நெகிழ்ந்து பேசியுள்ளார் யார் அந்த நடிகர் தெரியுமா?

அந்த நடிகர் குறித்து வடிவேலு கூறியதாவது, “சிங்காரவேலன் படத்தில் கமல் சாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எனது நடிப்பை பார்த்த அவர் என்னை பார்த்து எந்த ஊரு டா நீ என்று கட்டிப்பிடித்து வாழ்த்தினார்.

அதன் பின், தேவர் மகன் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தது கமல் சார் தான். தமிழ் சினிமாவில் எனக்கு திருப்புமுனை கொடுத்த கடவுள் அவர். நகைச்சுவை கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த என்னை, முதன் முதலில் அந்த படத்தில் சீரியஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார் கமல். என்னுடைய கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அந்த படத்தில் கிடைத்த வரவேற்பை வைத்து அடுத்தடுத்த 10 படங்களில் நான் நடித்தேன். அன்று முதல் ஹீரோக்களுடன் பயணிக்கும் கதாபாத்திரத்தில் தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன் என்று மனம் திறந்து கமல் குறித்து வடிவேலு பகிர்ந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.