கோலிவுட்டில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கும் ஹீரோவாக இருப்பவர், நடிகர் அஜித்குமார்.
இவர் கைவசம் அடுத்தடுத்து பிரபல இயக்குநர்களின் படங்கள் இருக்கின்றன. தற்போது இவர், குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
குட் பேட் அக்லி:
தமிழ் சினிமாவில், வளர்ந்து வரும் இயக்குநர்களாக இருக்கும் பலர், தங்களுக்கு பிடித்த நடிகர்களை வைத்து படம் இயக்கி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் அஜித்குமாரின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன், அவரை வைத்து இயக்கி வரும் படம்தான், குட் பேட் அக்லி. இப்படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில், சமீபத்தில் இப்படத்தின் வேலைகள் பூஜையுடன் தொடங்கின. ஹைதராபாத்தில் நடைப்பெற்று வரும் படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டிருக்கிறார்.
குட் பேட் அக்லி திரைப்படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில், கண்களில் கூலிங் கிளாஸ் பாேட்டுக்கொண்டும், கழுத்தில் பெரிய செயின்கள் அணிந்து கொண்டும் பார்ப்பதற்கே பெரிய தாதா போல தோற்றம் கொண்டிருந்தார் நடிகர் அஜித்குமார். அது மட்டுமன்றி நடிகர் அஜித்குமார் தவறான விரலை அப்பாேஸ்டரில் காண்பித்திருப்பது போன்ற போட்டோவும் இடம் பெற்றிருந்தது. இது சர்ச்சையாக மாறியது.
ஹீரோயின் யார்?
குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வேகத்தில் நடைப்பெற்று வருகிறது. படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தில் யார் அஜித்திற்கு ஜோடி என்பது மட்டும் இன்னும் தெரியாமல் இருக்கிறது.
30 வயது இளைய நடிகை..
கீர்த்தி சுரேஷை நாயகியாக நடிக்க வைக்க முழு மூச்சாக வேலைகள் நடைப்பெற்று வந்தாலும், இன்னும் இரண்டு கதாநாயகிகளிடமும் இது குறித்து பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. அதில் ஒருவர், தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா. இவருக்கு தற்போது 22 வயதாகிறது. இவரும் கூட, அஜித்துடன் நடிக்கலாம் என பேசப்படுகிறது. அஜித்திற்கு தற்போது 53 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
குட் பேட் அக்லி படத்தில் மும்முரமாக நடித்து வரும் அஜித்கதுமார், விடாமுயற்சி திரைப்படத்திலும் நடித்தார். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இம்மாதம் நடைப்பற இருக்கிறது.அஜித்தின் 64 படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்த விவாதமும் தற்போது நடைப்பெற்று வருகிறது.