கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல் வரிகளில் உருவாகியுள்ள ‘வேட்டைக்காரி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய கவிஞர் வைரமுத்து தெரிவித்ததாவது..
கலைத் துறைக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை . பள்ளி நாட்களில் இருந்தே நான்
படத்துறையை விட்டுத் தள்ளி நிற்கிறவன். இன்று இந்த விழாவுக்கு வந்து நான் கலை
உலகத்தோடு உறவாட வந்திருக்கிறேன். எனக்கு இது அந்நியமாக இருக்கிறது என்ற
பொருளில் நம்முடைய மீசை அமைச்சர் இன்று அற்புதமான உண்மையைச் சொன்னார், ஆனால் உங்களுக்கு கூட்டுறவுத்துறை மட்டும் போதாது, பாட்டுறவுத் துறையும் வேண்டும்
என்ற எண்ணத்தில் அழைத்திருக்கிறார்.
*பூவே பூச்சூடவா, நீதானே எந்தன் பொன் வசந்தம், படத்தலைப்புகள் எல்லாம் என்
பாடல் வரிகள் தான் இப்போது தான் திருப்பாச்சி கூட என் பாடல் வரிதான் என தெரிகிறது. இப்படி எனக்குத் தெரியாத எத்தனை பெயர்கள் உள்ளது என்று தெரியவில்லை, நீங்கள் ஏன்
கேட்கவில்லை என்று பலர் கேட்டனர், அதற்கு ஜெயகாந்தன் சொன்ன பதிலை தான்
நானும் சொல்கிறேன், இல்லாதவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.
ஒரு தலைப்பு
தமிழ் சமுதாயத்தில் சுழற்சி முறையில் சுழன்று கொண்டு வருகிறது. ஆங்கிலத்தில் தலைப்பு வைத்து படம் நன்றாக ஓடினால், அதற்கு சான்று தந்தால் ஏற்றுக் கொள்கிறேன், தமிழில் தலைப்பு வைத்தால் படம் ஓடாது என்று சொன்னால் அதற்கும் சான்று தாருங்கள் ஏற்றுக் கொள்கிறேன்.
ஒரு நடிகர் தன்னை close up இல் வைக்க சொன்ன போது எத்துப் பல்லாக உள்ளது,
அசிங்கமாக உள்ளது என்று சொன்னார்கள், அப்படி நிராகரிக்கப்பட்டவர் எம் ஜி ஆர். ஒரு படத்தில் ஒரு நடிகர் வசனம் பேசினால் மீன் வாய் திறப்பது போல உள்ளது வாயை
திறக்காமல் பேச சொல்லுங்கள் என்றனர், அப்படி சொல்லப்பட்ட நடிகர் சிவாஜி
கணேசன்.
கவிதை எப்போது இசையுடன் இணைந்து கொடி கட்டி பறக்கிறதோ, அப்போதெல்லாம் தமிழ் பாட்டு உச்சத்தில் கொடி கட்டி பறந்து இருக்கிறது . காலை யோகாசனமும் நடைப்பயிற்சியும் முடித்து பத்திரிக்கை படிக்க உட்காருகிறேன் தொலைபேசி வருகிறது 6:15 நேத்து சாயங்கால நீங்க பேசுற பேச்சு அற்புதம் பின்னிட்டீங்க இந்த விஷயத்தை மட்டும் நீங்கள் தவிர்த்து இருக்கலாம் என்று விமர்சனமும், பாராட்டும் வருகிறது.
ஒரு நல்ல கவிதை கிடைத்தால் ஒரு பாடல் ஆசிரியர் பாடலாக்கி விட வேண்டும் என்று
துடிப்பார். இப்போது நல்ல பாடல்கள் வருவதில்லை தெரியுமா? எதற்கு பஞ்சம் என்றால் பாடல்களை உட்கார வைக்க படத்தில் இடம் இல்லை, படத்தில் பாடலை உட்கார வைக்க இடுப்பு இல்லை. ஒரு பாடலை ஐந்து நிமிடத்திற்கு கூட பயன்படுத்த உங்கள் படத்தில் இடமில்லை.
ஆங்கில படத்தில் படத்தோட படமாய் பாடல்கள் தேய்க்கப்பட்டு விடுகிறது, அதை
தமிழ் படத்தில் பயன்படுத்தாதீர்கள். தமிழில் பிறக்கும் போது, தவழும் போது, நடக்கும் போது, இறக்கும் தருவாயில் கூட பாட்டு உள்ளது. படத்தில் பாட்டு நிற்க வேண்டும் என்றால் அதற்கு தனி ஸ்கிரீன் பிளே இருக்க வேண்டும்.
நாளுக்கு நாள் திரையரங்குகளில் திரைப்படம் பார்க்கும் தமிழர்கள் எண்ணிக்கை
குறைந்து வருகிறது என்று என் திரையரங்க உரிமையாளர்களாக இருக்கும் நண்பர்கள்
தெரிவித்தனர். காதலர்கள் திரையரங்குகளுக்கு வருகிறார்கள், திரைக்கு எதிர்ப்புறம் திரும்பி உட்காருகிறார்கள். சினிமா இங்கு ஓடுகிறது, அவர்கள் படம் அங்கு ஓடுகிறது.
கோடை காலத்தில் 50 ரூபாய் கொடுத்தால் 2 மணி நேரம் ஏ சி யில் இருந்து விட்டு
வரலாம் என்று திரையரங்குகளுக்கு வருகிறார்கள். சினிமா வடிவம் மாறுகிறது அழிந்து விடவில்லை, மனிதன் இருக்கும் வரை சினிமா இருக்கும் அது தன் வடிவத்தை தான் மாற்றிக் கொள்ளும். பத்திரிகையாளர்கள் சர்ச்சையை உருவாக்கி விடாதீர்கள் உங்கள் சர்ச்சையை எங்களால் சமாளிக்க முடியவில்லை’ என வைரமுத்து தெரிவித்துள்ளார்.