காமெடி நடிகர் வடிவேலு காமெடியனாக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் .சில காலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலமாக என்ட்ரி கொடுத்தார்.
அதன் பிறகு மாமன்னன் படத்தில் இவருடைய மாறுபட்ட சிறப்பான நடிப்பு பலரையும் கவர்ந்தது. சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வடிவேலுவிடம், உங்களுக்கு பிடித்த நகைச்சுவை நடிகர் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சுருளி ராஜன் எல்லாரையும் பிடிக்கும் என்று கூறினார் .
உடனே செய்தியாளர் ஒருவர் அப்போ யோகிபாபு, சூரி எல்லாம் நகைச்சுவை நடிகர்கள் இல்லைனு சொல்றீங்களா? என்று கேள்வி எழுப்பினார்.அதற்கு பேசிய வடிவேலு, ஒரு பார்ட்டி ஏழரைய இழுக்கவே இங்கு வந்திருக்கு என்று தனக்கே உரிய பாணியில் கூறி, அவங்க நடிப்பெல்லாம் நல்லா இருக்கும் என்று பதில் அளித்துள்ளார். வடிவேலுவின் புகழை கெடுக்க வேண்டும் என்று சிலர் இப்படி செய்கின்றனர் என்று அவரது ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர்