இயக்குனர் செல்வராகவனின் சமீபத்தைய படங்களான NGK மற்றும் நானே வருவேன் உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
ஆனாலும் அவரின் பழைய படங்களான புதுப்பேட்டை, காதல் கொண்டேன் மற்றும் 7 ஜி ரெயின்போ காலணி உள்ளிட்ட படங்களை இன்றளவும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது புதுப்பேட்டை திரைப்படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை ரசிகர்கள் நினைவுகூர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள தனுஷ், “ஒரு நடிகருக்கு திரைப்பயணத்தில் சில பாத்திரங்கள் மட்டுமே அழுத்தமாக அமையும். அப்படி எனக்கு அமைந்ததுதான் கொக்கி குமார் கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தை எனக்குக் கொடுத்த இயக்குனர் செல்வராகவனுக்கு நன்றி. நான் அந்த பாத்திரத்தை என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செய்யவேண்டும் என நினைத்தேன்” எனக் கூறியுள்ளார். இந்த ட்விட்டர் பதிவை தனுஷ் ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.