சுந்தர் சி யின் அடுத்த படம் கலகலப்பு 3 யா..?

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான சுந்தர் சி இயக்கி, நடித்த படம் அரண்மனை 4. ஆண்மையில் வெளியான இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் மற்றும் பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு “ஹிப் ஹாப் ஆதி” இசையமைத்துள்ளார்.

கடந்த மே 3 ஆம் தேதி வெளியான இந்தப் படம் உலகளவில் இதுவரைக்கும் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இயக்குநர் சுந்தர் சி இயக்கும் அடுத்த படம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சிவா, விமல் மற்றும் வாணி போஜன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு வருகிற ஜூலை மாதம் துவங்கும் என்று தெரிவைக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்களின் இயக்குநர் என்று எப்பவுமே அழைக்கப்படுபவர் சுந்தர் சி.
வழக்கம் போல் அவர் எடுக்கும் அரண்மனை சீரிஸ் படங்கள் வெற்றியை கொடுத்த காரணத்தினால், மறுபடியும் கலகலப்பு சீரிஸ் படங்களும் வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் அந்த வரிசையிலே சென்று விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.