இங்க நான் தான் கிங்கு – திரைவிமர்சனம்

கடன் வாங்குவதால் என்ன பிரச்சனை என்பதை காமெடியாக சொல்ல முற்படுகின்ற படம்.

90s கிட்ஸஆக வரும் சந்தானம் திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காகவே 25 லட்சம் ரூபாய்க்கு கடன் வாங்கி அடுக்கு மாடி வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார். பெண்களை தேடி அலைய வேண்டாம் என்பதற்காகவே திருமண தகவல் மையத்திலேயே வேலைக்கும் செல்கிறார். ஆனால் அவரின் எதிர்பார்ப்போ தனக்கு வரப்போறோம் பின் தன் வீட்டுக் கடனையும் அடைக்க வேண்டும், தன்னையும் சந்தோசமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால் அவருக்கு எந்த ஒரு பெண்ணும் சரியாக அமையவில்லை இந்நிலையில் கல்யாண புரோக்கராக வரும் மனோபாலா, சந்தானத்திற்கு ஒரு ஜமீன்தார் குடும்பத்து வரனை காட்டுகிறார்.

மனோ பாலா சொல்லும் ஆசை வார்த்தைகளை  நம்பி சந்தானமும் பெண்பார்க்க செல்கிறார். அந்த இடத்தில் சந்தானத்திற்கு, உடனடியாக திருமணமும் நடந்து விடுகிறது. அந்த ஜமீன்தார் குடும்பத்தில் வேற ஒரு சிக்கல் இருக்கிறது என்பதும் அப்போதுதான் அவருக்கு தெரிகிறது.

இன்னொரு புறம் கதையின் ஆரம்பத்தில் மும்பை குண்டு வெடிப்புக்கு காரணமான தீவிரவாதி ஒருவர் சென்னையில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் அவன் சென்னையில் குண்டு வைப்பதற்கு திட்டமிடுவதாகவும்   தகவல் வெளியாகியுள்ளதால் அவனை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் சன்மானம் என்றும் காவல்துறையினரால் அறிவிக்கப்படுகிறது.

ஒருபுறம் சந்தானத்தின் கடன் எல்லாம் அடைக்கப்பட்டு விட்டதா..? இன்னொரு புறம்  காவல்துறையினர் இந்த தீவிரவாதியை பிடித்து விட்டனரா என்பதை சொல்வது தான் இங்கு நான் தான் கிங்கு படத்தின் கதை.

படத்தின் முதல் பாதியில் எடுக்கும் ஓட்டம்..  இரண்டாவது பாதியில் தேய்ந்து சோர்ந்து விடுகிறது. அதனால் வழக்கமாக ஒரு சுந்தர் சி படத்தில் வரும்  வைர கதையை போன்று இந்த கதையும் மாறிவிட்டது.

கதாநாயகி பிரியாலயா ‘இன்ஸ்டாகிராம் புகழ்’, நடனத்தில் மெருகேற்றியது போல,  நடிப்பில் இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம்.

விவேக் பிரசன்னாவின் நடிப்பு அபாரம். மகளிர் மட்டும் படத்தில் வரும் நாகேஷுக்கு இணையாக ஒரு கதாபாத்திரம் செய்திருப்பது, அவரின் திறமையான நடிப்புக்கு போடும் தீனி.

சந்தானம் இந்த படத்தில் காமெடிக்கு என்று உடல் மொழியை பயன்படுத்துவது சற்று ஆறுதல் வழக்கம்போல வசனம் பேசி காது கிழிக்க வைக்காமல் செய்திருக்கிறார்.

தம்பி ராமையா மற்றும் பால சரவணன் அவர்களுக்கென்று ஒரு தனி பாணியில் நகைச்சுவையை செய்து கொண்டிருக்கிறனர்.

டி இமான் இசையில் பாடல்கள் கேட்கும்படியாக உள்ளன.

இரண்டாம் பாதியில் இரண்டு மூன்று சீன்களை தூக்கி எறிந்தால் இரண்டாம் பாதியில் படம் மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கும்.  இங்கு நான் தான் கிங்கும் நிஜமாகவே கிங்காக இருந்திருக்கும் என்பது உண்மை.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் என்பதால், படத்தின் வியாபாரத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. படத்தில் போட்ட முதலீட்டை திருப்பி எடுக்கும் என்று நம்பலாம்.

ஆகமொத்தம் இந்த, இங்க நான்தான் கிங்கு கோடைகாலத்தில் குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய ஒரு சுமாரான காமெடி படம்.