டாலி தனஞ்செயா நடிக்கும் புதிய படத்திற்கு ‘கோடீ’ என பெயரிடப்பட்டு, டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. கன்னட தொலைக்காட்சியில் தனது புதிய சாதனைக்காக அறியப்பட்டவர் இயக்குநர் பரம்.
கலர்ஸ் கன்னட சேனலில் கன்னட மண்ணின் பாரம்பரிய கதைகளை வழங்குவதில் அவருக்கு இருந்த விரிவான அனுபவத்திலிருந்து கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை இயக்குநர் பரம் எழுதி இருக்கிறார். யுகாதி பண்டிகை அன்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘கோடீ’ படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
‘கோடீ’ – ஒரு மில்லியன் கனவுகளை கொண்ட அன்றாட நபரை சுற்றி வருகிறார் என தலைப்பு தெரிவிக்கிறது. இந்தப் படம் ஒரு சாதாரண மனிதனின் கனவுகளுக்காக பாடுபடும் உணர்ச்சிகளை ஆழமாக ஆராயக்கூடும் என தனஞ்செயா ஏற்கனவே சுட்டிக்காட்டி உள்ளார்.
ஹொய்சாலாவின் கடைசி பயணத்திற்குப் பிறகு.. ஒரு வருட இடைவெளிக்குப்பின் தனஞ்செயா கன்னட திரையுலகிற்கு திரும்பி இருக்கிறார். அவர் ‘கோடீ ‘ படத்தின் மூலம் புதிய அலைகளை உருவாக்கவிருக்கிறார். இந்தத் திரைப்படம் அவரது வாழ்க்கையில் பெரிய தருணத்தை குறிக்கும்.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பரம். இதைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், “கடந்த ஆண்டு தொலைக்காட்சி சேனலில் இருந்து வெளியே வந்தவுடன் பெரிய திரையில் கதைகளை உயிர்ப்பிப்பதே என் இலட்சியமாக இருந்தது” என்றார்.
இந்தி திரையுலகில் வெற்றியை ருசித்திருக்கும் ஜியோ ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜோதி தேஷ்பாண்டே இந்த படத்தை தற்போது கன்னடத்திலும் தயாரிக்கிறார்.
அருண் பிரம்மா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு வாசுகி வைபவ்- நோபின் பால் ஆகிய இருவரும் இணைந்து இசையமைக்கிறார்கள்.
இப்படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில், இதன் டீசர் எதிர்வரும் 13 ஆம் தேதியன்று வெளியிடப்படும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.