‘மிக்ஜாம்’ புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு ரசிகர் மன்றங்கள் மூலமாக 10 லட்சம் உதவி செய்யும் சூர்யா – கார்த்தி…
‘மிக்ஜாம்’ புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிதி உதவி செய்கின்றனர்.
தங்களது ரசிகர் மன்றங்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட, அத்தியாவசியப் பொருட்களை வழங்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.