தொடங்கியது விஜய் தேவரகொண்டா புதிய படத்தின் படப்பிடிப்பு! இசையமைக்கும் அனிருத்!!

டோலிவுட் ஸ்டார் விஜய் தேவரகொண்டா, தீவிரமான ஒரு ஆக்‌ஷன் திரில்லர் கதைக்காக ‘ஜெர்சி’ புகழ் கௌதம் தின்னனுரியுடன் இணைந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே! இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘VD12’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதன் படப்பிடிப்பு நேற்று ஹைதராபாத்தில் தொடங்கியது. ஹைதராபாத்தில் உள்ள சாரதி ஸ்டுடியோவில் தொடங்கிய இந்த படப்பிடிப்பில், படத்தின் முன்னணி நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.

விஜய் தேவரகொண்டாவின் புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில், விஜய் தேவரகொண்டா ஆக்ரோஷமாக துப்பாக்கியை பிடித்துள்ளதை போல் உள்ளது. இந்த முதல் கிளிம்ப்ஸ் போஸ்டரில் அவரது தோற்றம் அவுட் ஆஃப் போகஸில் உள்ளதால் படத்திற்காக அவர் எப்படி மாறியுள்ளார் என ஆவலோடு எதிர்பார்த்து இருக்கிறார்கள் அவருடைய ரசிகர்கள்.

இப்படத்தில் நாயகனாக நடிக்கும் விஜய் தேவரகொண்டாவுடன் ஸ்ரீ லீலா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, கௌதம் இயக்குகிறார்.

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர்.