சூர்யாவை இயக்கும் பிரபல இயக்குனர்; அதிகரிக்கும் எதிர்பார்ப்பு;

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவர் தான் சூர்யா. தற்போது இவரின் 42வது படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இப்படத்தில் பாலிவுட் முன்னணி நடிகை திஷா பாட்னி நடித்து வருகிறார். 3ட தொழில் நுட்பத்துடன் பிரம்மாண்ட பொருட் செலவில் இப்படம் உருவாகி வருகிறது.

இதையடுத்து இவர் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கும் “வாடிவாசல்” படத்தில் நடிக்கவுள்ளார்.

இதனை தொடர்ந்து, பான் இந்தியா படமாக வெளியான “சீதா ராம்” திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

இந்நிலையில் சீதா ராம் படத்தின் இயக்குனர் ஹனு ராகவப்புடி இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க போகிறாராம்.

இப்படமும் பான் இந்தியா படமாக உருவாகுவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.