தனுஷ், சம்யுக்தா, சமுத்திரகனி நடிப்பில். தெலுங்கு இயக்குனர் “வெங்கி அட்லுரி” இயக்கத்தில் உருவாகியுள்ள பை-லிங்குவல் திரைப்படம் “வாத்தி”.
ஒரு ஊரில் இருக்கும் CD கடையை சுத்தம் செய்வதற்காக மூன்று இளைஞர்கள் கடைக்கு செல்கின்றனர். அப்போது, அவர்களுக்கு ஒரு பழங்கால கேஸ்ட் ஒன்று கிடைக்க, அதை அவர்கள் பார்க்க ஆரம்பிக்கின்றனர். அதில், ஆசிரியர் ஒருவர் கணக்கு பாடம் மிக எளிமையாக புரியும் விதத்தில் சொல்லி தர. அவரிடம் டியூஷன் செல்லவேண்டுமென அவரை தேடி செல்கின்றனர் இளைஞர்கள்.

அப்போது, நான்-லீனியர் பேட்டர்னில் இக்கதை ஆரம்பிக்கிறது.
கதை என்னவென்று பார்த்தால் 2000 காலகட்டத்தில் தனியார் பள்ளி நடத்தும் சமுத்ரகனி, அரசு பள்ளிகளை நிரந்தரமாக மூடுவதற்கு. தனது பள்ளியில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கவும் சில சதி வேலைகளை செய்கிறார்.
அது அனைத்தையும் உடைத்தெறியும் ஹீரோவாக இருக்கிறார் தனுஷ். இவ்வளவு தான் கதை. அதற்கு அவர்கள் தந்த பில்டப் கொஞ்சம் அதிகம் தான்.
தனுஷ் எப்படி இந்த கதையை தேர்வு செய்தார் என்பதே கேள்விக்குறியாக ஒரு விஷயமாக இருக்கிறது. அவரின் நடிப்பு வழக்கம் போல் சிறப்பாகவே இருந்தது.
சம்யுக்தாவுக்கு சினிமாவில் பெரிய இடம் இருக்கிறது என்பது அவரின் நடிப்பை பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும்.
முன்பெல்லாம் சமுத்திரகனி நடிக்கும் படம் ஹிட் அடிக்கும். அல்லது பேசும் பொருளாகவாவது வளம் வரும். ஆனால், இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான மூன்று படமும் அவர் கதை கேட்காமல் சம்பளத்தை மட்டுமே கேட்டு நடித்து வருகிறாரோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறது. “தலைக்கூத்தல்”, “நான் கடவுள் இல்லை” வரிசையில் “வாத்தி”-யிலும் சறுக்கியிருக்கிறார் சமுத்ரகனி.

தெலுங்கு மற்றும் தமிழ் வசனங்களை அவர்கள் மாற்றி மாற்றி பேசுவதால் டப்பிங்கில் சிங்க் இல்லை.
“சூப்பர் 30”, “ராட்சசி”, “சாட்டை” போன்ற படங்களை காப்பி அடித்திருந்தால் கூட இப்படம் பார்க்கும் ரகத்தில் சேர்ந்திருக்கும்.
2000 காலகட்டத்தில் நடந்த கதை என்பதால் அந்த காலத்து படங்களை போல் குழந்தை தனமான ஸ்க்ரீன் பிலே வைத்திருக்கிறாரா? இயக்குனர் வெங்கி என்பது அவருக்கு தான் வெளிச்சம்.
ஜி.வி.பிரகாஷ் பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி ஓகே ரகம்.
வாத்தி – கொஞ்சம் மாத்தி எடுத்திருக்கலாம்.