சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் படத்திற்கு இசையமைக்கும் நிவாஸ் கே. பிரசன்னா

சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான அருண் விஸ்வா தயாரிப்பில் ’புரொடக்ன் நம்பர் 4’ திரைப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பாளராக இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் திரையுலகில் ரசிக்கும்படியான பாடல்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா. அவரது இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுவதுடன், திரையரங்குகளுக்கு ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

சமீபத்தில் வெளியான ‘தாய் கிழவி’ உள்ளிட்டப் பல வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இன்னும் பல நம்பிக்கைக்குரிய படங்களில் இசையமைக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா.

ஹரிஹர சுதன் அழகிரி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் ஜென் ஸீ சென்சேஷன் பாரத் கதாநாயகனாகவும், ‘குடும்பஸ்தன்’ படப்புகழ் சான்வே மேக்னா கதாநாயகியாகவும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திட்டமிட்ட காலக்கட்டத்திற்குள் படப்பிடிப்பு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒளிப்பதிவை தேனி ஈஸ்வர் மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை சி.எஸ். பாலச்சந்தர் கவனிக்க, ஆடை அலங்கார வடிவமைப்பை கிருத்திகா சேகர் மேற்கொள்கிறார்.

‘மாவீரன்’, ’3BHK’ போன்ற வெற்றிப்படங்கள் மூலம் பான்-இந்திய அளவில் கவனம் பெற்ற சாந்தி டாக்கீஸ் நிறுவனம், தனது வெற்றிப் பயணத்தை ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ மூலம் தொடரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.