பிறந்தநாள் பரிசாக வெளியான ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ ஃபர்ஸ்ட் லுக்… விஜய் சேதுபதி–பூரி ஜெகன்னாத் கூட்டணியில் பான்-இந்தியா ஹைப்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி – ஸ்டைலிஷ் இயக்குநர் பூரி ஜெகன்னாத் இணையும் புதிய பான்-இந்தியா திரைப்படமான “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அதிகாரப்பூர்வ தலைப்பு, விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் படம் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
‘PuriSethupathi’ என ஹேஷ்டேக் உருவாக்கும் அளவிற்கு எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இந்த படம், முழுமையான ஆக்சன் எண்டர்டெய்னராக உருவாகி வருகிறது. படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட்-ப்ரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கௌர் தயாரிக்க, ஜே பி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஜே.பி. நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணை தயாரிப்பாளராக உள்ளார்.
‘ஸ்லம் டாக்’ என்ற பிரதான தலைப்புடன், ‘33 டெம்பிள் ரோடு’ என்ற டேக்லைன் கொண்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், படத்தின் உலகத்தையே ஒரே ஃப்ரேமில் உணர்த்துகிறது. கலைந்த முடி, தாடி, பிச்சைக்காரன் உடை, நீளமான ஸ்கார்ஃப் மற்றும் பூட்ஸ் அணிந்து, பனிமூட்டம் சூழ்ந்த குடிசைப் பகுதியில், கையில் பெரிய கதையை பிடித்தபடி, சுற்றிலும் பணக்கட்டுகள் பறக்கும் பின்னணியில் விஜய் சேதுபதி தோன்றும் இந்த தோற்றம், படத்தின் தீவிரமான ஆக்சன் தன்மைக்கு வலுவான சைகை அளிக்கிறது.

தன் நாயகர்களை முற்றிலும் புதிய மேக்கோவர்களுடன் திரையில் அறிமுகப்படுத்துவதில் பெயர் பெற்ற பூரி ஜெகன்னாத், இந்த படத்தில் விஜய் சேதுபதியை இதுவரை பார்க்காத ஒரு அவதாரத்தில் வடிவமைத்துள்ளார். திரை வாழ்க்கையில் புதிய பாத்திரத் தேர்வுகளுக்குப் பெயர் பெற்ற விஜய் சேதுபதிக்கு, இது இன்னொரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். தபு மற்றும் துனியா விஜய் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, பிரம்மாஜி மற்றும் VTV கணேஷ் நகைச்சுவை பாத்திரங்களில் இடம் பெற்றுள்ளனர். நடிகர் தேர்விலேயே படம் பான்-இந்தியா தன்மையை வெளிப்படுத்துகிறது.
‘அர்ஜுன் ரெட்டி’, ‘அனிமல்’ போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், இப்படத்திற்கு இசையமைக்கிறார். அவரது பின்னணி இசை, படத்தின் ராவான ஆக்சன் சூழலை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ள ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’, பான்-இந்தியா மார்க்கெட்டில் விஜய் சேதுபதியின் இடத்தை மேலும் உறுதிப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டுடன், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.