முழுமையாக புதுமுகங்களால் உருவாக்கப்பட்டுள்ள ‘கடுக்கா’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.
‘கடுக்கா’ – சிரிப்பும் எளிமையும் கலந்த புதுமுக முயற்சிஎஸ். முருகராசு இயக்கியுள்ளார். தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை அனைவரும் புதியவர்கள் என்பதும் இப்படத்தின் சிறப்பாகும்.
ஈரோடு அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கும் விஜய் கவுரிஷ் (நாயகன்) பத்தாம் வகுப்புக்குப் பிறகு படிப்பை நிறுத்தி, வேலை இன்றி பெண்களைத் துரத்திக் கொண்டிருப்பவர். இப்படியான சூழ்நிலையில், அவருடைய வீட்டுக்கு எதிரே கல்லூரி மாணவி ஸ்மேஹா தனது குடும்பத்துடன் குடியேறுகிறாள்.
விஜய் கவுரிஷ் தொடர்ந்து அவளைப் பின்தொடர, இறுதியில் காதலை ஏற்றுக்கொள்கிறாள் ஸ்மேஹா. இதற்கிடையில் திருப்பூரில் வேலைக்குச் செல்வதாகக் கூறி, விஜயும் அவரது நண்பர் ஆதர்ஷும் நகரத்துக்கு செல்கின்றனர். ஆனால் இருவரும் ஸ்மேஹாவின் அன்பில் சிக்கியிருப்பது தெரியவர, நட்பில் பிளவு ஏற்படுகிறது.
மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பும் அவர்கள், யாரைத் தேர்வு செய்வாள் என்பதைக் கேட்டு ஸ்மேஹாவைத் துரத்துகின்றனர். இறுதியில் இவர்களின் காதல் எந்தத் திசையில் முடிகிறது என்பதே க்ளைமாக்ஸ்.
புதிய முகங்கள் நடித்திருந்தாலும், அவர்கள் தங்கள் கதாபாத்திரங்களில் எதார்த்தமாகவும் இயல்பாகவும் தோன்றுகிறார்கள்.
இயக்குநர் எஸ். எஸ். முருகராசு, வட்டார வழக்குச் சொற்களுடன் இயல்பான உரையாடல்களை அமைத்து, கதை சொல்லும் முறையில் பார்வையாளர்களை கவர்ந்துள்ளார். தனிப்பட்ட நகைச்சுவை டிராக் இல்லாமல், கதையோடு சேர்ந்து நகைச்சுவை இயல்பாக நகர்கிறது.
சதீஷ்குமார் துரைக்கண்ணு அவர்களின் ஒளிப்பதிவு மற்றும் ஜான்சன் நோயலின் படத்தொகுப்பு நேர்த்தியாக உள்ளது. கெவின் டி’கோஸ்டின் பாடல்களுக்கான இசை மற்றும் பின்னணி இசை படத்திற்கு உறுதுணையாக இருக்கிறது.
முன்னணி நடிகர்கள் இல்லாமல், புதுமுகங்களால் உருவாக்கப்பட்ட இப்படம், சிரிப்பு மற்றும் எளிமை கலந்த ஜனரஞ்சகமான திரைப்படம். வட்டார வழக்குச் சொற்கள், எளிமையான காட்சிகள், இயல்பான நடிப்பு ஆகியவை படத்தின் பலமாகத் திகழ்கின்றன.
புதுமுகங்களின் நேர்த்தியான முயற்சியாக ‘கடுக்கா’ பார்வையாளர்களை சிரிக்கவைக்கும் குடும்பம் ரசிக்கக்கூடிய திரைப்படமாக அமைந்துள்ளது.
குறிப்பு: முன்னணி நட்சத்திரங்கள் நடித்து அல்லது இயக்கிய படங்களை மட்டுமே பார்த்து, அது குப்பை படமாகவே இருந்தாலும், அதை ஆஹா ஓஹோ என பொய் பிரசாரம் செய்யும் முன்னணி திரைக்கலைஞர்கள், புதியவர்கள் கூட்டு படைப்பில் வெளியாகியுள்ள “கடுக்கா” திரைப்படத்தை, பார்து அதை பற்றி சமூக வலைதளங்களில் பாராட்டி பதிவிட்டு, பொதுவெளியிலும் பாராட்டி பேசினால் தமிழிலும் நல்ல படங்கள் தொடர்ந்து வெளியாக வழிவகை செய்யும்.
மதிப்பீடு: (4/5)