VYOM எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில், இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகும் “Untitled Production No.1” திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இந்த படத்தில் செல்வராகவன் – குஷி ரவி ஜோடியாக நடிக்கின்றனர். மேலும் Y. G. மகேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ், தீபக், ஹேமா, லிர்திகா, N. ஜோதிகண்ணன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவு – ரவி வர்மா K, படத்தொகுப்பு – தீபக் S, இசை – A. K. பிர்ரியன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
சேலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது படம் பதிப்பு, ஒலி வடிவமைப்பு, பின்னணி இசை போன்ற பிந்தைய பணிகளில் நுழைந்துள்ளது.
படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு, ஃபர்ஸ்ட்-லுக் போஸ்டர் மற்றும் வெளியீட்டு தேதி தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
