கோபி இயக்கத்தில் தினேஷ் அப்பு குட்டி, தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ள படம் யாதும் அறியான்.
இந்த படத்தில் டீசர் இணையத்தில் வெளியானது. டீசரை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் அளவிற்கு ஹாலிவுட் ஸ்டைலில் வித்தியாசமாக கொடுத்திருந்தார்.
அறிமுக நாயகன் தினேஷ் நடிக்க அவருடன் அப்பு குட்டி, தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர். பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தர்ம பிரகாஷ் இசையமைத்துள்ளார்.