விஜய் ஆண்டனி, அஜய் திஷான் பிரகிடா, சமுத்திரகனி இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில், விஜய் ஆண்டனி இசையில் அவரே தயாரித்து லியோ ஜான்பால் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம்.
கதையின்படி காதலர் தினத்தன்று ஒரு பெண் மர்ம நபரால் வித்தியாசமான முறையில் கொல்லப்படுகிறார். ஆனால் அதே மாதிரி ஒரு கொலை மும்பையில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் விஜய் ஆண்டனி வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. இதனை கேள்விப்பட்ட விஜய் ஆண்டனி அலுவல் இல்லாமல் இந்த கேஸை சால்வ் பண்ணுவதற்காக சென்னைக்கு வருகிறார். அப்படி துப்பு துலுங்கும் போது யார் அந்த கொலையாளி விஜய் ஆண்டனியின் வாழ்க்கையிலும் அந்த கொலைக்கும் என்ன சம்பந்தம் என்று கூறுவது தான் இந்த படத்தின் கதை.
நடிப்பை பொறுத்தவரையில் விஜய் ஆண்டனியின் நடிப்பு முந்தைய படங்களை விட நன்றாகவே மெருகேறி இருக்கிறது. ஆனால் விஜய் ஆண்டனியை விட அஜய் திஷானின் நடிப்பு இரண்டு படி மேலே உயர்த்திக் காட்டுகிறது. பிரகிடா எஸ்ஐ தோற்றத்திலும் இல்லை, கல்லூரி டீச்சர் தோற்றத்திலும் இல்லை கல்லூரி மாணவி போல் இருக்கிறார்.
திரைக்கதையை பொருத்தவரை கதை, படத்திற்கு தேவையான காட்சிகளை தாண்டி வேறெங்கும் நகராமல் செல்வது மிகவும் சிறப்பு.
அதிலும் குறிப்பாக அஜய் திஷான் விஜய் ஆண்டனியிடம் மாட்டிக்கொள்ளும் காட்சியிலிருந்து படம் ஒரே இடத்தில் தேங்கி விடுமோ என்று அச்சம் இருந்தது. ஆனால் சற்று நேரத்தில் அந்த அச்சம் விலகும் அளவு அடுத்தடுத்து திரைக்கதை நகர்ந்தது நிதர்சனம். அஜய் திஷான் தண்ணீருக்குள் மூச்சு அடக்கி தியானம் செய்யும் காட்சி நம்மை சில நேரங்களில் நடுக்க முரச் செய்கிறது. ஆனால் கிணற்றிற்குள் தப்பி விழுந்த குழந்தை கடவுள் போல் மாறியது அபத்தமான காட்சியாகவே பார்க்கப்படுகிறது.
படத்தின் பலம் விஜய் ஆண்டனியின் பின்னணி இசை.
ஒளிப்பதிவு படத்திற்கு தேவையான அழகான காட்சிகளை மிகவும் தத்ரூபமாக காட்டி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் விஷுவல் காட்சிகள் மிக நேர்த்தியாக உள்ளன.
இந்தப் படத்தின் இயக்குனரான லியோ ஜான் பால் ஒரு எடிட்டர் என்பதால் கதைக்குத் தேவையான காட்சிகளை மட்டும் வைத்து கூடுதலாக ஒரு ஃப்ரேம் கூட வைக்காமல் இருந்தது படத்திற்கு கூடுதல் சிறப்பு.
ஆக மொத்தத்தில் மார்கன் படம் சில சித்து ஜாலங்களை அதிகம் காட்டாமல் தவிர்த்து, முறைப்படி குற்றத்தை கண்டுபிடிக்கும் காட்சிகளாக வைத்திருந்தால் மிகவும் பிரம்மிப்பாகவே இருந்திருக்கும்.