கேப்டன் விஜயகாந்த், கஸ்தூரிராஜா, யோகி சேது, அருள் தாஸ், முனீஸ்காந்த் சண்முக பாண்டியன், யாமினி சுந்தர் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் இயக்குனர் அன்பு இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம்.
கதைப்படி பொள்ளாச்சி சேத்துமடையில் சண்முக பாண்டியன், அவரது தந்தை கஸ்தூரிராஜா தங்கை மற்றும் அவருடைய யானை மனியன் என குடும்பமாக மிகவும் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் ஒரு கும்பலால் தந்திரமாக அந்த யானை கடத்தப்படுகிறது. அதை மீட்பதற்காக சண்முக பாண்டியன் செல்கிறார். ஆனால் அதே வேளையில் ஒரிசா மாநிலத்தில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் உள்ள பழங்குடியின மக்களை, ஒரு கும்பல் அடிமைகளாக்கி அவர்களின் விலங்குகளை நரபலி கொடுத்து வருகிறது. இதை தடுக்க வேண்டும் என்று ஊர் பூசாரியான முனிஷ்காந்த் அடிக்கடி நினைக்கிறார். யாராவது காப்பாற்ற வர மாட்டார்களா என்று ஏங்குகிறார். இதற்கும் சண்முக பாண்டியன் பயணத்திற்கும் ஒரு தொடர்பு ஏற்படுகிறது. இறுதியில் என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை.
இது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல ஆங்கில சினிமாவிலும் கேட்டு சலித்துப்போன ஒரு கதை தான் என்றாலும் திரைக்கதையில் ஏதாவது வித்தியாசப்படுத்தி இருக்கிறார்களா என்றால் சற்று சிறிதாகவே வித்தியாசப்படுத்தி இருக்கிறார்கள். அதாவது கேப்டன் விஜயகாந்தின் ஏஐ என்ட்ரி. நரபலி சம்பந்தமான காட்சி. யானைகள் சத்தமிடும் காட்சி என்ன சின்ன சின்ன விஷயங்கள் திரைக்கதையில் வித்தியாசத்தை கொடுத்தாலும் படம் வித்தியாசமாக தெரியவில்லை. ஏற்கனவே இதைப் போன்ற அதே சாயலில் ராஜ பீமா என்ற ஒரு படமும் வெளியானது. அந்தப் படமும் பெரிதாக போகவில்லை. அதே கதையை தான் இந்தப் படத்திலும் எடுத்து வைத்திருக்கிறார்கள்.
சண்முக பாண்டியன் நடிப்பு இன்னும் மெருகேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதே சமயத்தில் கஸ்தூரிராஜா நூறு ரூபாய்க்கு நடிக்க சொன்னால் ஆயிரம் ரூபாய்க்கு நடிக்கிறார். முனீஸ்காந்த், அருள்தாஸ், கருடன் ராம், ரிஷி ரித்விக் என அவர்களது வேலையை சிறப்பாக செய்துள்ளனர். இந்தப் படத்தில் கதாநாயகி கருவேப்பிலை தூவுவது போல் சற்றே வந்து சென்றுள்ளார்.
எஸ் ஆர் சதீஷ் குமாரின் ஒளிப்பதிவு இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தாலும், இசை ஞானி இளையராஜாவின் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலகீனமாக இருக்கிறது.
அறிமுக இயக்குனரான அன்பு இந்த கதையை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை ஏற்கனவே கும்கி வீரன் என்று வேற்று மொழியில் வெளியான படத்தின் அதே டெம்ப்ளேட்டை திரும்பத் திரும்ப எடுக்கிறார்கள். கொஞ்சம் மாற்றி எடுத்திருக்கலாம்.
ஆக மொத்தத்தில் படைத்தலைவன் கொஞ்சம் சுமார் தலைவன்.