ஆறு மாதங்களுக்கு முன் ஜெயம் ரவி தான் கோடம்பாக்கத்தில் ஹாட் டாபிக் கன்டென்ட் ஆக இருந்தார்
மனைவியுடன் சண்டை, மாமியார் தயாரித்த படங்கள் பெரும் நஷ்டம், மாடல் அழகியுடன் டேட்டிங் என்றெல்லாம் இவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள்.
ஒரு வழியா இப்பொழுது மனைவியை பிரிந்து விட்டார். மும்பை பக்கம் அவரது காற்று வீசுகிறது. மாடல் அழகி மற்றும் பாடகி கென்னிஷாவுடன் ஊர் சுற்றி வந்தாலும் இப்பொழுது புது அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். ஏற்கனவே அவர் முதல் முதலாக பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கிறார்.
இப்பொழுது அவரது மாமியார் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாருக்கு சவால் விடும் விதமாக களத்தில் இறங்கியுள்ளார். அவர் ரூட்டில் இவரும் அடுத்தடுத்து படங்கள் தயாரிக்க உள்ளார். முதல் கட்டமாக எஸ் ஜே சூர்யாவுடன் இவர் சேர்ந்து நடிக்க போகும் ஒரு படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை வடக்குப்பட்டி ராமசாமி புகழ் கார்த்திக் யோகி இயக்குகிறார்.
இதுபோக ஜெயம் ரவிக்கு இயக்கும் ஆசை கூட இருக்கிறதாம். யோகி பாபு நடிக்க ஒரு படத்தை டைரக்ட் செய்யப் போகிறாராம். அந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கவிருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகிறது. ஜெயம் ரவி மற்றும் ஐசரி கணேஷ் இருவருக்கும் நல்ல நட்பு இருந்து வருகிறது.
பொதுவாக ஐசரி கணேஷ் யார் எதை கேட்டாலும் இல்லை என்று சொல்லாத அன்புடையவர். இதனால் ஜெயம்ரவி ப்ராஜெக்ட் கூடிய விரைவில் டேக் ஆப் ஆகும் என தெரிகிறது. இந்த படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் ஜெயம் ரவியே தயாரித்தால் நன்றாக இருக்கும் என அவரது சுற்றுவட்டாரங்கள் அறிவுரை கூறி வருகிறது.