Ace திரை விமர்சனம்.

விஜய் சேதுபதி, யோகி பாபு, ருக்மணி வசந்த், பப்லு ப்ரித்விராஜ் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில், ஷாம் CS பின்னணி இசையில் ஆறுமுக குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம்.

கதைப்படி ஜெயிலில் இருந்து வெளிவரும் விஜய் சேதுபதி மலேசியா நாட்டில் ஏதாவது ஒரு பிழைப்பு பிழைக்கலாம் என்று வருகிறார். அப்பொழுது தப்பாக விஜய் சேதுபதியை தன்னுடைய வேலையாள் என்று நினைத்து யோகி பாபு ஒரு ஹோட்டல் கடையில் சேர்த்து விடுகிறார். ஆனால் அந்த ஹோட்டல் கடை முதலாளிக்கு ஒரு பிரச்சனை. அதே சமயம் அவர் முதன்முதலாக பார்க்கும் அவருடைய காதலியான ருக்மணி வசந்திருக்கும் ஒரு பிரச்சனை. இது மட்டும் இல்லாமல் யோகி பாபுவிற்கும் ஒரு பிரச்சனை. இதையெல்லாம் தாண்டி விஜய் சேதுபதியும் ஒரு பிரச்சனையை சேர்த்து இழுத்துக் கொள்கிறார். இது எல்லாத்தையும் எப்படி சரிப்படுத்துகிறார் என்பதுதான் படத்தின் கதை கரு.

பொதுவாகவே ஒரு சினிமாவிற்கு தேவையான அடிப்படை கதை தான் இது. ஆனால் இதை திரைக்கதையில் எவ்வளவு சுவாரஸ்ய படுத்திருக்கிறார்களோ அந்த அளவுக்கு படம் இனிமையாக விரிவடையும். ஆனால் இந்த படத்தின் திரைக்கதையை வழக்கம்போல் அல்லாமல் வித்தியாசமான திரைக்கதையை சித்தரிப்பது தான் இந்த படத்திற்கு ஒரு பெரிய பலம்.

விஜய் சேதுபதி மிகவும் ஸ்மார்ட்டாக இருக்கிறார். ருக்மணி வசந்த் படத்தில் தேவதையாக வந்து ஜொலிக்கிறார். பப்லு பிரித்திவிராஜ் நீண்ட நாட்களுக்கு பின் அவள் வருவாளா படத்தில் வரும் வில்லன் லுக்கை கொடுத்திருக்கிறார். யோகி பாபு வழக்கும் போல் காமெடியில் ஜொலித்திருக்கிறார்.

படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை மிகப்பெரிய பலமாக இருக்கிறது. சாம் C S ன் பின்னணி இசை காட்சிகளை துரிதப்படுத்துகிறது.

படத்தின் ஒளிப்பதிவு, மலேசியாவில் பில்லா படத்திற்கு பிறகு இது மாதிரியான ஒரு ஒளிப்பதிவு வேறு எந்த படத்திலும் காட்டியது இல்லை என்று கூறலாம்.ஒளிப்பதிவாளருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.

இறுதியாக இந்த படத்தின் இயக்குனர் ஆறுமுக குமாரை பற்றி பேசியே ஆக வேண்டும். கதை என்னவாக இருந்தாலும் திரைக்கதையில் வித்தியாசப்படுத்த வேண்டும், கதைக்களத்தில் வித்தியாசப்படுத்த வேண்டும் என்ற முனைப்போடு இந்த திரை கதையையும் சரி, கதைக்களத்தையும் மாற்றி அமைத்து வித்தியாசமான திரை கதையை விஜய் சேதுபதிக்கு கொடுத்த திரு ஆறுமுக குமாருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.

ஆக மொத்தத்தில் ACE படம் அனைவரும் பார்க்கக்கூடிய படம். கொஞ்சம் லாஜிக் மிஸ்டேக்ஸ் உள்ளது. சகித்துக் கொள்ளலாம்.