ரவி மோகனின் அறிவிப்புக்கு மறுப்பு தெரிவித்து மறு அறிக்கை வெளியிட்டார் மாமியார் சுஜாதா!

நடிகர் ரவி மோகன் குற்றச்சாட்டுக்கு, தயாரிப்பாளரும் அவரது மாமியாருமான சுஜாதா விஜயகுமார் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் “தன்னைப் பற்றி எழுந்துள்ள அவதூறுகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும்,

தன் குழந்தைகளின் எதிர்காலம் கருதி மவுனமாய் இருந்து விட்டதாக பதிவிட்டுள்ளார்.

சுஜாதா விஜயகுமாரின் அறிக்கையில், “நான் கடந்த 25 வருடங்களாக திரைப்படத் துறையில் பணியாற்றி வந்தேன். ஒரு பெண்ணாக இந்த துறையில் நீடிப்பது எவ்வளவு சவாலான விஷயம் என்பது உங்களுக்கு தெரியும். நான் கடந்த காலத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு பொறுப்பேற்று அமைதியாக இருந்தேன். ஆனால் தற்போது என்னைப் பற்றிய பொய்யான கூறல்கள் உண்மையாகி விடுகின்றன, எனவே நான் விளக்கம் அளிக்கின்றேன்,” என்றார்.

மேலும், “நான் தயாரித்த படங்கள் விமர்சன ரீதியில் பாராட்டப்பட்டன, ஆனால் வணிக ரீதியில் அவை வெற்றி பெறவில்லை. நான் 100 கோடி ரூபாய் கடன் வாங்கி படங்கள் தயாரித்தேன். இதற்காக நான் திரு ஜெயம் ரவிக்கு 25 சதவிகிதம் சம்பளமாக வழங்கினேன். இதற்கான அனைத்து ஆதாரங்களும் எனக்குள்ளது,” என்று சுஜாதா குறிப்பிட்டுள்ளார்.

இவரின் அறிக்கையில், “திரு ஜெயம் ரவி சொன்னதைப் போல, கோடி ரூபாய்க்கு, அல்லது ஒரு ரூபாய்க்கும் அவர் பொறுப்பேற்க வைத்ததாக எந்த ஆதாரம் இருந்தாலும், அதை வெளியிட வேண்டும்,” என்று கேட்டு கொண்டார்.

இந்நிலையில், சுஜாதா விஜயகுமார், ரவி மோகனின் குற்றச்சாட்டுகளை முறையாக மறுத்து, இதுவரை அவர் நினைத்துக் கொண்டிருக்கின்ற குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான தவறான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறார்.