அம்.. ஆ திரை விமர்சனம்..

தேவதர்ஷினி, திலீஷ் போத்தன் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் படம்.

மலை உச்சியில் இருக்கும் ஒரு கிராமத்திற்கு திலீஷ் போத்தன் ரோடு காண்ட்ராக வருகிறார். அதே கிராமத்தில் தேவதர்ஷினி தனது பேத்தி குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். ஆனால் திலீஷ் போத்தன் ஏதோ ஒரு விஷயத்தை கண்டுபிடிப்பதற்காக மர்மமான முறையில் தேவதர்ஷணியின் பேத்தியான அந்த குழந்தையை அனுகுகிறார். இறுதியில் அந்த குழந்தைக்கு என்ன ஆனது திலீஷ் போத்தன் யார், தேவதர்ஷினிக்கும் அந்த குழந்தைக்கும் என்ன உறவு என்பதை என்ற முடிச்சுகளை அவிழ்ப்பதே படத்தின் கதைக்கரு.

மலையாள படம் என்றாலே சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லை என்று தான் சொல்ல வேண்டும். வெறும் சாதாரண கதை கருவை எடுத்துக்கொண்டு திரைக்கதையில் அசத்தி விடுவார்கள். இந்தப் படத்திலும் அப்படித்தான்.

திலீஷ் போத்தன் ஒரு பக்கம் போட்டி போட்டுக்கொண்டு நடிக்கிறார் என்றால் தேவதர்ஷினி அதற்கு இணையாக ஒரு மிகப்பெரிய அசாத்திய நடிப்பை கொடுத்திருக்கிறார். வாழ்த்துக்கள். தமிழ்நாட்டில் அவரை லூசு அக்கா, லூசு அம்மாவாகவே பார்த்த இடத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்ததற்கு மலையாள சினிமாவிற்கு நன்றி.

படத்தின் திரைக்கதை தொய்வில்லாமல் சென்றாலும் இரண்டாம் பாதியில் பல தொய்வுகளை கொண்டுள்ளது.

ஒளிப்பதிவு மிகப் பிரமாண்டமாக உள்ளது. இசை கதைக்கு ஏற்றார் போல் உள்ளது.

ஆக மொத்தத்தில் ஆம் ஆ படம் குடும்பத்தோடு காண வேண்டிய ஒரு நல்ல படம்.