ஜெய்லர் 2 க்கு அழைத்தால் நிச்சயம் செல்வேன்: நடிகர் மோகன்லால்!

ப்ரித்விராஜ் இயக்கத்தில், நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் எம்புரான் படம் தொடர்பான புரோமோஷனில் மோகன்லால் ஜெயிலர் படம் குறித்து பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, ‘ ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு பிறகு எனக்கு தமிழில் படம் நடிப்பதற்காக நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் நான் எம்புரான் மற்றும் இதர படங்களில் பிசியாக இருந்தேன். அதனால் என்னால் தமிழில் எந்த படத்திலும் கமிட்டாக முடியவில்லை. தற்போது ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் தொடங்கி இருக்கிறது. அந்தப் படத்தில் என்னை நடிக்க கூப்பிட்டால் நான் நிச்சயமாக செல்வேன்; ஆனால், என்னை கூப்பிடுவார்களா என்பது எனக்கு தெரியாது

ஜெயிலர் 2 படத்தில் இடம்பெற்ற மேத்வியூ கேரக்டர் மிகவும் நன்றாக இருந்தது. அந்த கேரக்டரில் வேறு யாரேனும் நடித்திருந்தால் கூட நன்றாகத்தான் இருந்திருக்கும். அந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும், தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறி என்னை ரஜினிசார் பார்க்க வந்தார். அப்படி ஒரு அந்தஸ்தில் இருக்கக்கூடிய ஒரு நடிகர் என்னிடம் உதவி என்று கேட்கும் போது, நான் எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியும். அதை நான் செய்துதானே ஆக வேண்டும்.’ என்று பேசினார்.

முன்னதாக, நடிகர் ரஜினி நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். மேலும், இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் சிவராஜ் குமார், ஜாக்கி ஜெராஃப் மற்றும் சுனில் உட்பட பலரும் நடித்திருந்தனர். தமன்னா காவாலா பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

இந்தப்படம் வசூலில் சக்கை போடு போட்டு, 650 கோடிக்கு மேல் வசூல் செய்தது. மேலும் இயக்குநர் நெல்சனின் திரைப்பட வாழ்க்கையிலும் பெரிய வெற்றி படமாகவும் அமைந்தது. ஜெயிலர் மிகப்பெரிய வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு சொகுசு கார்களை பரிசாக வழங்கினார்.

இந்த நிலையில் இந்தப்படத்தின் இரண்டாம் பாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் ஜெயிலர் 2 திரைப்படம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, பிடிஎஸ் வீடியோவையும் வெளியிட்டது.