ஒட்டுமொத்த உலகமே ரசிக்கும் இசையை கொடுக்கும் இசையமைப்பாளராக இசை ஞானியாக இளையராஜா திகழ்கிறார். இவரது பாடல்கள் தான் 70ஸ், 80ஸ், 90ஸ் கிட்ஸ்களுக்கு மருந்து.
எங்கு பார்த்தாலும் இளையராஜாவின் பாடல்கள் தான். எப்படி இறைவன் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பார்களோ அதே போன்று தான் இளையராஜாவின் இசை இல்லாத இடங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தனது இசை, பாடல்களால் இந்த உலகத்தை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்.
இளையராஜா 7000க்கும் அதிகமான பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். அதே போன்று 20000க்கும் அதிகமான இசை கச்சேரிகளை நடத்தியிருக்கிறார். ஆரம்ப காலகட்டங்களில் நாட்டுப்புற இசையை வெளிப்படுத்தி வந்த இளையராஜா பாவலர் பிரதர்ஸ் என்ற இசைக்குழுவில் இணைந்து 10 ஆண்டுகளில் தென்னிந்தியா முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.
இன்று உலக மக்கள் கொண்டாடும் ஒரு இசையமைப்பாளராக, பின்னணி பாடகராக, பாடலாசிரியராக, இசைஞானியாக திகழ்கிறார். இந்த நிலையில் தான் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் ஸ்டுடியோவிற்கு ரஷ்யாவைச் சேர்ந்த நடன கலைஞர்கள் வருகை தந்து நடனமாடி அசத்தியிருக்கிறார்கள்.
இது தொடர்பான வீடியோவை இளையராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இளையராஜா பகிர்ந்த வீடியோவைல் ரஷ்யாவைச் சேர்ந்த நடன கலைஞர்கள் தங்களது நாட்டு ஸ்டைலில் ஓ பட்டர்ஃளை பட்டர்பஃளை என்ற பாடலுக்கும், பூவே செம்பூவே என்ற பாடலுக்கும் டான்ஸ் ஆடி அசத்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார்.
இதில் பூவே செம்பூவே என்ற பாடல் இடம் பெற்ற படம் சொல்ல துடிக்குது மனசு. இந்தப் படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்துள்ளார். இந்த பாடலை வாலி எழுதியிருக்கிறார். மேலும், ஆ கே ஜே யேசுதாஸ் மற்றும் சுனந்தா இந்த பாடலைபாடியிருக்கின்றனர். இதே போன்று ஓ ஃபட்டர்பிளே என்ற பாடல் இடம் பெற்ற படம் மீரா. இளையராஜா இசையில், இந்த பாடலை எஸ் பி பாலசுப்பிரமணியம் சோலோ வெர்ஷனில் ஒரு பாடலும், ஆஷா போஸ்லே உடன் இணைந்து இதே பாடலையும் பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.