சூரியின் அடுத்த படத்தை இயக்குகிறார் வெற்றிமாறன் அசிஸ்டன்ட்!

நடிகர் சூரி தான் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சூரியுடன் முதல்முறையாக இயக்குநர் மதிமாறன் கைகோர்க்கிறார். வெற்றிமாறனுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ள மதிமாறன் இயக்கும் இப்படத்தை ஆர். எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிக்கிறது.

ஆர். எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிப்பில் படமாக்கப்பட்ட ‘விடுதலை – 2’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 நாள்கள் நிறைவடையும் நிலையில், புதிய படம் குறித்த அறிவிப்பை இன்று மேற்கண்ட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.