குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். இவர், தமிழ் திரைப்பட இயக்குநர் என்பதை தாண்டி, அஜித்தின் தீவிர ரசிகரும் கூட. இவரை வைத்து பல நாட்களாக படம் இயக்க வேண்டும் என ஆசைப்பட்ட அவர், ஒரு வழியாக அதனை குட் பேட் அக்லி படம் மூலம் நிறைவேற்றிக்கொண்டார். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு அஜித், விடாமுயற்சி படத்தில் நடித்து கொண்டிருந்த போதே, இடையில் இந்த படத்திலும் சைன் செய்தார். இதில், அஜித்திற்கான காட்சிகள் சுமார் 3 மாதங்களுக்குள் படமாக்கி முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
https://x.com/SureshChandraa/status/1876232694847140278?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1876232694847140278%7Ctwgr%5E65afbe416266389e2c7e35868961acfb0577297e%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F
வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி இப்படம் வெளியாக இருப்பதாக அஜித் சார்பில் அவரது செயலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருக்கிறார். இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வருகின்றனர்.