Myth 2 திரைவிமர்சனம்

ஜாக்கிசான் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம்.

 

அவரின் முதல் பாகமான மித் படம் எந்த அளவுக்கு எதிர்பார்ப்பை கொடுத்ததோ, அதில் துளியும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கிறது.

 

ஒவ்வொரு கதை மாந்தருக்கும் அவர்களின் நினைவில் கடந்த காலத்தைப் பற்றிய கனவுகள் வருகின்றன. அந்தக் கனவில் அந்த நாட்டின் இளவரசியை யார் கரம் பிடித்தார்கள், எதிரி எப்படி வீழ்த்தப்பட்டான் என்பதோடு முடியும். இந்த கடந்த கால வாழ்க்கையும், நிகழ்கால வாழ்க்கையும் இணைத்து சொல்வதுதான் மித் 2 படத்தின் கதை.

 

இது மாதிரி ஆயிரம் கதைகள் தமிழ் சினிமாவில் வந்து புலக்கப்பட்டு விட்டன. குறிப்பாக மகதீரா படத்தை இந்த படம் நிறையவே ஞாபகப்படுத்துகிறது. அதனால் இந்த படம் பெரிதாக இருக்கவில்லை.

 

ஜாக்கி சான் படம் என்றாலே சண்டை காட்சிக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் இதில் ஜாக்கிசானின் சண்டைக்காட்சி ஒன்று கூட இல்லை என்பது வேதனையான விஷயம். அவருக்கு வயதாகி விட்டதால் ஆக்சன் காட்சிகள் நடிக்க மாட்டேன் என்று முன்பே கூறியிருந்தார். அப்படி இருக்கும்போது ஏன் இயக்குனர்கள் அவரை தொந்தரவு செய்ய வேண்டும். அதிலும் De Aging என்று சொல்லக்கூடிய AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவரை மிகவும் இளமையாக காட்ட முயற்சி செய்துள்ளனர். அது சரியாக ஒட்டவில்லை.

 

ஜாக்கி சான் படத்திலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடிய ஒரு படம் எதுவென்றால் அது இந்த மித் 2 படமாக தான் இருக்கும்.

 

ஆக மொத்தத்தில் மித் 2 ஜாக்கி சான் நடித்த படம் அல்ல என்று கற்பனை செய்து கொள்ளலாம்.