விடாமுயற்சி வெளியாகாத நிலையில் அஜித் படம் குறித்த அடுத்த அப்டேட்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த படமும் வெளியாகாமல் ரசிகர்களை ஏமாற்றி வந்த அஜித், கடந்த ஆண்டு தொடர்ந்து இரண்டு படங்களை நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் வரும் பொங்கல் நாளன்று வெளியாக இருந்த விடாமுயற்சி தள்ளிப்போனது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது உறுதி.

தற்போது நடிகர் அஜித்தின் மற்றொரு படம் குறித்தான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியின் இயக்கத்தில் அடுத்து நடிகர் அஜித் நடிக்க இருப்பதாகவும் அந்த கதையின் ஒன்லைனை அஜித்திடம் தெரிவித்த போது உடனே பணிகளை ஆரம்பிக்குமாறு தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர் தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டிற்குள் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்ணும் கண்ணும் குள்ளே எடுத்தால் படத்தின் மூலம் தமிழக மக்களை திரும்பி பார்க்க வைத்தவர் தேசிங்கு பெரியசாமி என்பது குறிப்பிடத்தக்கது.