சங்கர் படத்திற்காக வைக்கப்பட்ட உலகிலேயே மிக உயரமான கட்டவுட்!

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘கேம் சேஞ்சர்’. இதில் கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

 

தமன் இசையமைத்துள்ள இப்படம் ஜனவரி 10-ம் தேதி வெளியாகிறது.

இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ராம் சரணுக்கு 256 அடி உயர கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே நடிகர்களுக்கான மிக உயரமான கட்-அவுட் இது என்று கூறப்படுகிறது.