நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாக நீண்ட நாட்களாக தகவல்கள் பரவி வந்தது.
இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் வதந்திகள் பரவியது.
இந்த நிலையில், புஷ்பா 2 திரைப்பட புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் தான் காதலிப்பவர் யார் என்பது தான் உங்கள் அனைவருக்குமே தெரியுமே? எனக் கூறினார்.
மேலும் அவருடன் தான் கல்யாணம். புஷ்பா 2 படம் ரிலீஸான பின் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக பேசுவதாக கூறினார். இதனால் ராஷ்மிகா மந்தனா- விஜய் தேவரகொண்டா காதல் உறுதியானது.
இந்த சமயத்தில் ராஷ்மிகா மந்தனா புஷ்பா 2 குறித்த காஸ்மோபாலிட்டன் நிகழ்ச்சியில், தனக்கான துணை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பேசியுள்ளதால், இவர்கள் இருவர் குறித்த பேச்சு மீண்டும் வெளிவரத் தொடங்கியுள்ளது.
ராஷ்மிகா, “ஒரு உறவில் மரியாதை தான் எனது முதல் முன்னுரிமை. நான் ஒருவருக்கொருவர் மதிக்கும்போது தான் அவர்களிடையே பிணைப்பு வலுவாக இருக்கும். பின்னர் நீங்கள் உங்கள் துணையிடம் நேர்மையாகவும், கவனத்துடனும், பொறுப்புடனும் இருக்க வேண்டும். இந்த குணங்கள் கொண்ட ஒருவருடன் நான் இருக்க விரும்புகிறேன். இவை எல்லாம் இல்லையென்றால், என்னால் அவருடன் பழக முடியாது, “என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “நானும் காதலிக்க விரும்புகிறேன். ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு துணை தேவை. நம்முடன் யாருமே இல்லை என்றால் இந்த வாழ்க்கையை வாழ்ந்து என்ன பயன்? உங்கள் ஏற்ற தாழ்வுகள் அனைத்தையும் காண, உங்கள் அருகில் நின்று வாழ்க்கையைக் கொண்டாட ஒருவர் தேவை இல்லையா?” என்றார்.
ஒரு உறவில் அன்பு, பச்சாத்தாபம், அக்கறை, நல்ல இதயம், வெளிப்படைத்தன்மை மற்றும் உண்மை ஆகியவை இருப்பது அவசியம். இது உறவுகளை வளர்க்க தேவையான பண்புகள். ஏனென்றால் இது என்னிடம் இயல்பாகவே இருந்து வருகிறது. என்னைப் போன்ற ஒத்த குணங்களைக் கொண்ட ஒருவருடன் தான் நான் இருக்க விரும்புகிறேன் என்று தனது விருப்பங்களை மிகவும் தெளிவாக கூறியுள்ளார்.