நடிகை தமன்னாவிடம் அமலாக்கத் துறையினர் 5 மணி நேரம் விசாரணை!

சட்டவிரோத ஐபிஎல் சூதாட்ட விளம்பரங்களுடன் தொடர்புடைய சூதாட்ட செயலிக்கான விளம்பரத்தில் நடித்தாகக் கூறப்படும் விசாரணை தொடர்பாக, நடிகை தமன்னாவுக்கு, அஸ்ஸாமின் குவாஹாத்தியில் உள்ள அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியது.

இதனை அடுத்து அமலாக்கத்துறையின் முன் ஆஜராவதற்காக தமன்னா தனது தாயுடன் குவஹாத்திக்குச் சென்றார்.

தமன்னா பாட்டியா, அவரது பெற்றோருடன் பிற்பகல் 1:25 மணியளவில் அமலாக்கத்துறை இயக்குநகர அலுவலகத்திற்கு வந்தார். ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் விசாரணை குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.