வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற கோட்.
விஜய், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட மேலும் பல பிரபலங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். லியோவை தொடர்ந்து மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் மூவியாக உருவாகியுள்ளது கோட். இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கோட் வெளியாக இன்னும் 9 தினங்களே இருப்பதால், படத்தின் ப்ரோமோஷன் வேலைகளும் வேகம் எடுத்துள்ளன.
இந்நிலையில், கோட் படத்தின் FDFS எப்போது என்பது தான் ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. அஜித்தின் துணிவு படம் வெளியான போது, அதிகாலை 4 மணிக்கு FDFS பார்க்கச் சென்ற ரசிகர் ஒருவர் விபத்தில் உயிரிழந்தார். அப்போது முதல் தமிழ்நாட்டில் அதிகாலை 4 மணி FDFS ஷோ கிடையாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதேநேரம் காலை 9 மணிக்கு முதல் காட்சியை திரையிடலாம் எனவும் அனுமதி கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் ரஜினி, கமல், விஜய் உட்பட எந்த முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கும் அதிகாலை 4 மணி FDFS ஷோவிற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால் தமிழகத்தில் கோட் திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு திரையிடுவது கஷ்டம் என்றே தெரிகிறது. அதேநேரம் கேரளாவிலும் பெங்களூருவிலும் கோட் படத்தின் FDFS அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படுவது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. அதேபோல், அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளிலும் அதிகாலை 4 மணிக்கு கோட் திரைப்படம் திரையிடப்படவுள்ளது. இந்த அப்டேட் கேரளா, பெங்களூரு ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தாலும், தமிழக விஜய் ரசிகர்கள் ரொம்பவே ஏமாற்றத்தில் உள்ளனர். விஜய் படத்துக்கு தமிழ்நாட்டில் அதிகாலை 4 மணி ஷோவுக்கு அனுமதி இல்லை, ஆனால் மற்ற மாநிலங்களில் கொடுக்கப்பட்டுள்ளதே என ரசிகர்கள் புது பஞ்சாயத்தை கிளப்பியுள்ளனர்.
இதனையடுத்து கோட் படத்தின் அதிகாலை 4 மணி காட்சியை பார்க்க, தமிழகத்தில் உள்ள விஜய் ரசிகர்கள் கேரளாவுக்கும் பெங்களூருவுக்கும் படையெடுக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், கோட் படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சி சென்னையில் நடைபெறவுள்ளது. வரும் 29ம் தேதி நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சியில் இயக்குநர் வெங்கட் பிரபு, பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. கோட் இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை என்பதால், இந்த பிரஸ்மீட் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் இந்நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்பாரா மாட்டாரா என்பது குறித்து இதுவரை எந்த அப்டேட்டும் இல்லை. ஒருவேளை விஜய் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் அது படத்துக்கு தரமான ப்ரோமோஷனாக இருக்கும் என ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். இன்னொரு பக்கம் கோட் படத்தின் 4வது சிங்கிள் யுவன் சங்கர் ராஜா பிறந்தநாள் தினத்தில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 31ம் தேதி யுவனின் பிறந்தநாள் என்பதால், அன்றைய தினம் கோட் 4வது பாடலை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதுபற்றியும் விரைவில் அப்டேட் வெளியாகும் எனத் தெரிகிறது